
நம் முன்னோர்கள் பூண்டை சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். பூண்டு மிகவும் மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். அதை சாப்பிடுவதால், உடலில் உள்ள பல பிரச்னைகள் சரியாகும். அதிலும் வறுத்த பூண்டை சாப்பிடும் போது நம் உடலில் 24 மணி நேரத்தில் எற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் குணமாகும். பூண்டு உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை கட்டுப்படுத்தும்.
வறுத்த பூண்டை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் செரிமானம் ஆகி உடலுக்கு நல்ல உணவாக மாறும். இரண்டு முதல் நான்கு மணி நேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கலை எதிர்த்துப்போராடும்.
நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் உடலில் உள்ள மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடலில் உள்ள அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும். மேலும் தேங்கியிருக்கும் கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும்.
ஆறு முதல் ஏழு மணி நேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி பேக்டீரியல் இரத்த நாளங்களில் நுழைந்து இரத்தத்தில் இருக்கும் பேக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
ஏழு முதல் பத்து மணி நேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு மட்டுமில்லாமல் உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
பத்து முதல் இருபத்தி நான்கு மணி நேரத்தில், முதல் ஒரு மணி நேரத்திலேயே பூண்டு உடலை சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடும். கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும், தமனிகள் சுத்தம் செய்யப்படும், இதய நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். நம் உடலில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.
எனவே, இனி வறுத்த பூண்டை தினமும் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.