வாசல் கோலம் முதல் ஸ்வஸ்திக் வரை: இந்து தர்மத்தின் 8 புனித அடையாளங்களும் அவற்றின் ரகசியங்களும்!

hindu-symbols
hindu-symbols
Updated on

ந்து சமயத்தைப் பின்பற்றும் மக்களின் வீடுகளிலும் இந்துக் கோவில்களிலும் கோலம் வரைதல், வீட்டின் முன் வாசல் நிலைப்படியில் மஞ்சள் குங்குமம் இடுதல் போன்ற அடையாளங்கள் புனிதமாகக் கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்று பின்பற்றப்பட்டு வரும் இந்துக்களின் 8 விதமான அடையாளங்களும் அவை உணர்த்தும் அர்த்தங்களும் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

ஓம் : ஓம் என்னும் மந்திரம் பிரபஞ்சத்தின் ஓசையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆன்மிகத்தை வெளிப்படுத்தும் சுய விழிப்புணர்வு மந்திரமாக பல சடங்குகளிலும் கொண்டாட்டங்களிலும் உச்சரிக்கப்படுகிறது.

ஸ்வஸ்திக்: ஸ்வஸ்திக் சின்னம் நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பான மற்றும் நன்மை தரக்கூடிய வாழ்வையும், நேர்மறை சக்தியையும் குறிப்பதற்காக ஆன்மிகம் சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் விழாக்களிலும் வரையப்படும் சின்னம்.

மலர்ந்த தாமரைப் பூ: இது புனிதத் தன்மையையும், ஆன்மிக வளர்ச்சியையும் குறிப்பதற்கான அடையாளம் ஆகும். தாமரை சேற்றுக்குள் வளர்ந்து வந்தாலும் வெளியே வந்து அழகாக மலர்ந்து தெய்வீகமான அழகை வெளிப்படுத்தும். மேலும் உலக வாழ்க்கையை ஒட்டுதலின்றி கடக்கவும் வழி காட்டும்.

சங்கு: கடலிலிருந்து கிடைக்கும் சங்கு (Conch) கடவுள் விஷ்ணுவுடன் சம்பந்தப்பட்டது. இது ஓம் என்னும் புனித மந்திரத்தை உள்ளடக்கியது. இது நீண்ட ஆயுளும், வளமான வாழ்வும் தரக்கூடியதாக கருதப்பட்டு, இந்துக்களின் ஆன்மிக சடங்குகளில் வைத்துப் பூஜிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஏன் கருவறைக்குள் மட்டும் அதிக ஆற்றல் கிடைக்கிறது? இதோ யாரும் அறியாத ஆன்மீகப் பின்னணி!
hindu-symbols

திரிசூலம்: திரிசூலம் எப்பொழுதும் சிவ பெருமானுடன் இருப்பது. இதன் மேல் பகுதியிலுள்ள மூன்று பிரிவுகள் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற சிவனின் முத்தொழிலையும் குறிப்பதாகும். இம் மூன்று சக்தியும் பிரபஞ்சத்தை உருவாக்கவும், அதில் உள்ள அனைத்து உயிர்களுக்குள்ளும் அவை நிலைத்து நிற்பதாகவும் நம்பப்படுகிறது.

நாகம் (Cobra): நாகப் பாம்பு மறுபிறவியையும், காஸ்மிக் எனர்ஜியுடைய குண்டலினி சக்தியையும் குறிக்கும் சின்னம். சிவன் மற்றும் விஷ்ணு கடவுளர்களுடன் காணப்படும் சின்னம் இது.

த்வஜா (Saffron Flag): தர்மத்தின் வெற்றியைக் குறிப்பது இந்த த்வஜா கொடி. இது சூரியனின் சுகமான சூட்டைத் தந்து அகிலத்தை ஆண்டு வருவது. இதைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது.

நடராஜா: நடராஜர் சிலை, சிவனின் முத்தொழிலாகிய ஆக்கல், காத்தல், அழித்தல் போன்றவற்றைக் குறிக்கும் சின்னம். அவரின் காஸ்மிக் (Cosmic) நடனமானது பிரபஞ்சத்தில் முடிவின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மூன்று தொழில்களையும், ஆன்மிகத்தையும், கடவுளின் அருளையும் குறிப்பதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com