

உடலுக்குத் தலை பிரதானம் போல் ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை கர்ப்பக்கிரகம் என்பார்கள். இதன் பின்னணியில் தேவ ரகசியமும் அடங்கியுள்ளது. முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியை வைத்து கருவறை அமைத்தனர். பிரபஞ்சத்திள்ள கதிர்கள் எல்லாம் ஒருவகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும் அவைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து ஆலயம் முழுவதும் பரவும். எனவேதான் ஆலயங்களுக்குச் செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது. கருவறையை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம்.
அதிஷ்டானம்
பாதம்
மஞ்சம்
கண்டம்
பண்டிகை
ஸ்தூபி
மூலவர் சிலை அதிஷ்டானம் ஆகும். கருவறையின் வெளிப்புறம் சுவரை கோஷ்டம் என்பர். அவற்றில் கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அந்தக்காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள் தங்களது அரண்மனையைவிட கோவில்கள் உறுதியாக இருக்கக் கருங்கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள் பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞானக் கோவில், கொகுடிக்கோவில், இளங்கோவில், மணிக்கோவில் என்று பல வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.
ஆனால் கருவறை வட்டம், முக்கோணம், சதுரம் என்று 3 வகையில் கருவறை அமைத்தார்கள் சதுரம் தேவ உலகத்துடனும், வட்டம் இறந்த இனத்தவர்களுக்கும் முக்கோணம் மண்ணுலத்துடனும் தொடர்பு உடையதாக கருதப்படுகின்றன.
தமிழகத்தில் முக்கோண கருவறை அமைப்பதில்லை. மதுரை அழகர்கோவில் கருவறை வட்டவடிவில் இருப்பது ஆச்சர்யமானது. மற்றபடி சதுரவடிவில்தான கருவறை இருக்கும். ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி கஜப்ருஷ்டம் வடிவில் இருக்கும். கஜம் என்றால் யானை. ப்ருஷடம் என்றால் பின்பகுதி. எனவே வெளிப்பகுதி யானையின் பின்பகுதி போன்று இருக்கும்.
கருவறை அமைக்குமுன் அந்த இடத்தில் தானியத்தை விதைப்பார் கள். அவை 3 நாட்களில் முளைத்துவிட்டால் உத்தமமான இடம். 5 நாட்கள் ஆனால் மத்யமம். 5 நாட்களுக்குப் பிறகு அதமம். உத்தமமான இடத்திலேயே கருவறை கட்டுவார்கள். கருவறைக்குள் வைரம், வைடூர்யம், தகடுகள், கருங்கற்கள், ஆற்றுமணல் போன்றவற்றை மணல் போட்டு நிரப்பும் வழக்கம் இருந்தது.
கருவறையை வலுவாக கட்டுவார்கள். தேப்பெருமாள் நல்லூரில் சிவாலயக்கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கருவறை இதயம் போன்றது. விரிஞ்சிபுயத்தில் மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவில் உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கருவறை சந்திரகாந்த் கல்லால் உருவானது. அதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாக வரும் இருக்கும்.
கருவறை விமானம் மூலம் சூரியகதிர்களின் அலை சிலைக்குச் செல்லும் அதேசமயம் சிலைக்கு அடியில் உள்ள இயந்திரம் பூமிக்கு அடியிலிருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவருக்கு தரும். இந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவிலில் வழிபட்டால் 100சதவீத ஆற்றல் கிடைக்கும். குளத்தில் வழிபட்டால் 1000சதவீதமும், ஆற்றில் 1லட்சம் சதவீதமும், அருவிகளில் ஒரு கோடியும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10கோடி பலனும் கிடைக்குமாம். ஆனால் கருவறை முன்பு நாம் வழிபாடு செய்ய பலநூறு கோடி அளவுக்கு நாம் ஆற்றல் பெறமுடியுமாம்.
இதை கருத்தில் கொண்டே எல்லா பக்கமும் மூடப்பட்டு கருவறையில் ஒரே விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். கருவறையில் பால் தயிர், சந்தனம், குங்குமம், விபூதி எண்ணை போன்ற அபிஷேகங்களால் நாற்றம் ஏற்படுவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக ஆகிறது. நைவேத்தியம்போது திரை போடுவார்கள். அப்போது ஆற்றல்கள் தேங்கியிருக்கும். திரை விலகும்போது ஆற்றல்கள் திரண்டு வந்து இருபக்கமும் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாகப் பாயும்.
பொதுவாக கருவறை மூலவர் மூலம் பிரம்ம முகூர்த்தத்தில் மிக அதிகமாக சக்தி பாயும். எனவே நேர்மறை ஆற்றல்கள் பெற கருவறை பிரம்ம முகூர்த்த வழிபாடு மிக மிக முக்கியமானது.