ஏழு பெண் சிறுமிகளை அம்மனாக பாவித்துக் கொண்டாடப்படும் திருவிழா!

Ezhai katha amman festival
Ezhai katha amman festival
Published on

ஏழைக்காத்த அம்மன் கோவில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடாவருடம் ஏழுப் பெண் சிறுமிகளை அம்மனாக பாவித்து திருவிழா கொண்டாடப்படுகிறது. அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

முன்னொருக் காலத்தில் மேலூர் அருகில் உள்ள வெள்ளலூர் நாட்டில் பலநூறு வருடங்களுக்கு முன்பு அக்கா தங்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அக்காவை அருகில் இருக்கும் 'தமராக்கி' என்ற ஊரில் திருமணம் முடித்து வைக்கிறார்கள். அக்காவுக்கு ஏழு பிள்ளைகள் பிறக்கிறார்கள். தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தைகளே இல்லை.

இருப்பினும், 'தனக்கு குழந்தைகள் இல்லை என்றால் என்ன?' என்று நினைத்து அக்காவின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக எண்ண ஆரம்பிக்கிறாள் தங்கை. அடிக்கடி அக்கா குழந்தைகளை பார்க்க  வருகிறாள்.

ஆனால், அக்காவிற்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. 'தங்கை தன்னுடைய குழந்தைகளை கண் வைத்துவிடுவாள்' என்று நினைத்த அக்கா, தங்கை வரும்போதெல்லாம் தன் குழந்தைகளை எங்காவது அனுப்பி வைத்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தாள்.

ஒருநாள் தங்கை பலகாரம் செய்துக்கொண்டு அக்காவின் குழந்தைகளை பார்க்க வருகிறாள். அக்காவும் தங்கை வருவதை பார்த்துவிட்டு தன் ஏழுக் குழந்தைகளையும் கோழி அடையக்கூடிய கூடையில் மறைத்து வைத்து விடுகிறாள். தங்கை வந்து அக்காவிடம், 'பிள்ளைகள் எங்கே?' என்று கேட்க, அதற்கு அக்காவோ, 'பிள்ளைகள் அனைவரும் வெளியிலே சென்று விட்டனர்' என்று கூறுகிறாள். ஆனால், அங்கே ஏழு கூடைகள் இருப்பதை தங்கை பார்த்து விடுகிறாள்.

இதனால் மனம் நொந்து அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தங்கை வீட்டை விட்டு போனதும் அக்கா சென்று கூடையை திறந்துப் பார்க்கிறாள். ஆனால், பிள்ளைகள் அனைவரும் கல்லாக மாறியிருந்தார்கள். அந்த ஏழு குழந்தைகளும் அம்மன் குளத்தின் நீர்ப்பட்டு உயிரோடு வந்ததாக கதையுண்டு.

மனம் நொந்துப் போன தங்கை வெள்ளலூர் நாட்டாரிடம் சென்று முறையிடுகிறார். 'குழந்தையில்லாத எனக்கு ஊர் பொதுமக்கள் பதினோறு கரைகளில் இருந்து ஏழுக் குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்து என்னிடம் விட வேண்டும். அந்த ஏழுச் சிறுமிகளும் என் பிள்ளைகளாக என் வீட்டிலேயே வளர வேண்டும்' என்று கூறுகிறார். இதை நினைவுக்கூறும் வகையில் தான் ஒவ்வொரு வருடமும் ஏழுப்பெண் சிறுமிகளை அம்மனாக தேர்ந்தெடுத்து ஏழைக்காத்த அம்மனுக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அரங்கன் மீது காதல் கொண்டு முடிவில் உயிர் துறந்த இஸ்லாமிய இளவரசி!
Ezhai katha amman festival

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com