ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பிரசாதம்...

புண்ணியம் தரும் பிரசாதங்கள்: எந்த கோவிலில் என்ன பிரசாதம் சிறப்பு தெரியுமா?
temple prasadam
temple prasadam
Published on

பிரசாதம் என்பது கோவிலில் இறைவனுக்கு படைக்கப்படும் தூய்மையான உணவுப் பொருட்கள். பூக்கள், இலைகள், திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவையும் பிரசாதங்களே. நாம் இறைவனுக்கு படைக்கும் போது அதை நைவேத்தியம் என்கிறோம். அதுவே இறைவனுக்கு படைக்கப்பட்ட பிறகு பிரசாதம் என்கிறோம். இது தெய்வீக அருளைப் பெறுவதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. பிரசாதம், ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு பிரசாதம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. லட்டு, பஞ்சாமிர்தம், சுண்டல், பொங்கல் போன்ற பல வகைகள் உள்ளன. எந்த கோவிலில் என்ன பிரசாதம் இறைவனுக்கு படைக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

* பழனி முருகன் கோவிலில் கனிகளை பிசைந்து செய்யப்படும் தித்திக்கும் பஞ்சாமிர்தம்.

இதையும் படியுங்கள்:
முருகனுக்கு சுருட்டு நிவேதனமாக வைக்கப்படும் விராலிமலைக் கோவில்! காரணம் என்ன?
temple prasadam

* சபரிமலை ஐயப்பன் கோவிலில் பச்சரிசியும் வெல்லமும் பாகாய் சேரும் மணக்கும் அரவணை பாயாசம்.

* திருச்செந்தூர் முருகன் கோவிலில் பழங்கள், சர்க்கரை, வெல்லம் கலந்த திருபாகம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* திருவாரூர் தியாகராஜருக்கு நைவேத்தியமாக நெய் தேன்குழல், பெரிய உளுந்து வடை படைக்கப்படுகிறது.

* நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மிளகு சேர்த்து தட்டிய கமகமக்கும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுண்டக்காய்ச்சிய பாலில் திரண்ட பால்கோவா.

* மதுரை கள்ளழகர் கோவில் தோசை. அழகர் கோவிலில் மலை உச்சியில் நூபுரகங்கை பாய்கிறது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தி தோசை தயார் செய்யப்பட்டு அழகருக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சுக்கும் மிளகு மணம் வீசும் காஞ்சிபுரம் இட்லி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* சிதம்பரம் நடராஜர் திருக்கோவில், புது அரிசியும், வெல்லமும் குழைந்த திருவாதிரை களி. இது நடராஜருக்கு மிகவும் உகந்த சிறப்பு பிரசாதமாகும், மேலும் ஆருத்ரா தரிசனத்தின்போது இது பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

* திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மிளகு புளியோதரை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

* பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிவில் தேங்காய் பூரணம் உள்ளே வைத்து செய்த மோதகம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, பின்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுக்கு கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று புட்டு நிவேதனம் செய்யப்பட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

* உப்பிலியப்பர் கோவிலில் உப்பில்லாத வடை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, பின்பு பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பாலில் பச்சரிசி வெந்து குழைந்த தித்திக்கும் அக்கார வடிசல். அக்கார வடிசல் என்பது பெருமாள் கோவில்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய, பால் சார்ந்த, மிகவும் சுவையான இனிப்புப் பொங்கல் வகையாகும்.

* பணக்கார கோவிலான திருப்பதி பெருமாள் கோவிலில் உலகமே வியக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன் பட்டணத்தில் குடிகொண்டிருக்கும் ஆயிரங்காளி அன்னை கோவிலில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மூன்று நாட்கள் அம்மனை பெட்டியில் இருந்து எழுந்தருளச் செய்து, ஆயிரம் அதிரசம் செய்து படையல் வைத்து, வணங்கிய பின்னர் பிரசாதமாக வழங்குகின்றனர்.

* சிங்கிரி குடியில் உள்ள லக்ஷ்மிநரசிம்மர் ஆலயத்தில் பானகம் நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* திருப்புல்லாணி கோவிலில் பால் பாயசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பூரி ஜெகன்னாதர் கோவில் மகா பிரசாதம்!
temple prasadam

* திருச்சானூர் பத்மாவதி தாயாருக்குப் மாலாடு படைத்து பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com