மழைப்பொழிவை முன்கூட்டியே சொல்லும் அதிசயக் கோயில்!

Sri jaganathar Temple
Sri jaganathar Templehttps://odishabytes.com

திசயங்கள் நிறைந்த உலகம் இது. தினமும் பல்வேறு அமானுஷ்ய அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத அற்புதம் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தைப் பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரு ஊரில் உள்ள மக்கள் மட்டும் வானத்தைப் பார்க்காமல், அங்குள்ள கோயிலுக்குச் சென்று அறிவார்கள்.

ஆம், மழை வருமா? வராதா என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் அதிசயக் கோயில் அது. உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூரில் அமைந்துள்ளது பகவான் ஸ்ரீ ஜெகன்நாதர் ஆலயம். சுமார் 1000 வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலின் மேற்கூரையிலிருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது. அதன் மூலம் அடுத்த எழு நாட்களில் அங்கு மழை பொழிய உள்ளது என்பதை அந்த ஊர் மக்கள் அறிந்து கொள்கிறார்கள். மேலும், அந்த வருடம் எவ்வளவு மழை பெய்யும் என்பதையும் அந்த ஊர் மக்கள் அறிந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக அந்தக் கோயிலின் உள்பகுதியில் மழை நீர் சொட்ட ஆரம்பித்துவிடுகிறது. ஏழு நாட்கள் இந்த மழை நீர் நிற்பதே இல்லை. ஆனால், வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோயிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.

அந்தக் கோயிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. கோயிலைச் சுற்றிலும் மரங்களோ, மலையோ ஏதுமில்லாத நிலையில் எங்கிருந்து நீர் சொட்டுகிறது? இதற்கு என்ன காரணம் என இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கான காரணத்தைக் கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடையை யாராலும் அறிய முடியவில்லை. இந்தக் கோயிலை சுற்றியுள்ள கிராம மக்கள் இங்கு சொட்டும் நீரின் அளவை பொறுத்தே அந்த வருடத்தில் என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தமிழரின் தொன்மையான தற்காப்புக்கலை: ஒரு பார்வை!
Sri jaganathar Temple

கோயிலுக்குள் எப்படி மழை பெய்கிறது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்தக் கோயில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால், 11வது நூற்றாண்டில் கடைசியாக இந்த கோயில் புனரமைக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலின் சுற்றுச்சுவர் 14 அடி தடிமன் கொண்டதாகும். வழக்கமாக எந்தக் கோயிலும் இதுபோல் அமைக்கப்படுவதில்லை. இந்தக் கோயில் முற்றிலும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் லட்சுமணர், மகாவிஷ்ணு, சந்திரன், சூரியன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் ஜெகநாதர் சிலை 6 முதல் 7 அடி உயரம் கொண்டது. இது கருங்கல்லால் செய்யப்பட்டதாகவும் ஜெகநாதரின் இருபுறங்களிலும் சுபத்திரா தேவி மற்றும் பாலபத்ரா, மகாவிஷ்ணு தசாவதாரக் கோலங்களும் கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளன. மிக அரிதான பஞ்சமுக விநாயகர் சிலையும் இக்கோயிலில் உள்ளது. நூறடி ஆழம் கொண்ட கிணறு ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவமைப்பு எந்த உலோகக் கலவையல் உருவாக்கப்பட்டது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com