ஆடி மாதமும் அர்த்தமுள்ள சாஸ்திர சம்பிரதாயங்களும்!

அம்மன் பூஜை
அம்மன் பூஜை
Published on

டி மாதத்தில் புதுமண தம்பதியருக்கு ஆடிப்பால் கொடுத்து புது மாப்பிள்ளை மற்றும் பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பர். புத்தாடைகள், சீர் வரிசைகள் வழங்குவர். இந்த விருந்தில் புது மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் எனும் தேங்காய் பால் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பர். பெண் தாய் வீட்டில் தங்குவாள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையான கோடைக் காலத்தில் குழந்தை பிறக்கும். இதனால் தாய் மற்றும் சேயின் உடல் நலம் பாதிக்கலாம் என்பதால் இந்த பழக்கத்தை கடைபிடிப்பர். கிராமப்புறங்களில், ‘ஆடிப்பால் சாப்பிடாத மாப்பிள்ளையை தேடிப் பிடி’ என்றொரு சொலவடை கூட உண்டு.

இந்த சங்கதிகளை எல்லாம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள். என்ன காரணத்திற்காக ஆடியில் திருமணம் நடத்துவதில்லை. சாந்தி முகூர்த்தம் குறிப்பதில்லை. புதுமணத் தம்பதிகளை சேர விடுவதில்லை என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

தகப்பனான சூரியன், தாயான சந்திரன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். ஜோதிடப்படி சூரியனே பிதுர்காரகன். அதேபோல், சந்திரன் மாத்ருகாரகன். சூரியனின் அதிதேவதை அக்னி. பிரத்யதி தேவதை சிவன். சந்திரனின் பிரத்யதி தேவதை கௌரி எனப்படும் பார்வதி.

இறைவன் அன்னை பார்வதியின் இல்லத்தை நாடிச்செல்லும் காலம். அதாவது, தன்னை விட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலம் என்பதால் ஆடி மாதம், அன்னை சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனுடைய இணைந்தார். இறைவனே அம்பிகையை நாடிச் சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிடித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல. காலமெல்லாம் அவர்கள் இணை பிரியாமல் வாழும் கலையை கற்றுத் தருவதற்காக வேண்டித்தான் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பூண்டு தரும் 10 வித ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள்!
அம்மன் பூஜை

புதிதாகத் திருமணமாகி சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும் பூஜை முறைகளையும் சொல்லித் தருவார்கள். புது மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய் வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர்.

ஆடி மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது. ஆடி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்வதைத் தவிர்க்கலாம். ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் நடக்காது என்பதாகத்தான் புதுமணத் தம்பதியரை தம் வீட்டிற்கு அழைத்து தாய் பெண்ணை தனது வீட்டோடு வைத்துக் கொள்கிறாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com