பூண்டு தரும் 10 வித ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள்!

பூண்டு
பூண்டுhttps://tamil.webdunia.com
Published on

ணவுக்கு சுவையூட்ட சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியப் பங்கு வகிப்பது பூண்டு. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அல்லிசினின், சபோனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற பைட்டோகான்ஸ்டிட்யூட்டுகளின் களஞ்சியமாகும் . வேறு எந்த உணவுப் பொருட்களிலும் இல்லாத இந்த ரசாயனக் கூறுகளால் பூண்டு நமக்கு ஏராளமான நன்மைகளைச் செய்கிறது. பூண்டு நமக்குத் தரும் ஆரோக்கிய நன்மைகளில் சிறந்த 10 நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. இரத்த அழுத்த பராமரிப்பு: தற்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் சரியான இரத்த அழுத்தத்தை பராமரிக்க மருந்துகளை நாடுகின்றனர். பூண்டு நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக மீட்டெடுக்க உதவுகிறது.

2. சரும ஆரோக்கியம்: சருமத் துளைகள் இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களால் அடைக்கப்படும்போது முகப்பரு ஏற்படுகிறது. பூண்டில் உள்ள அல்லிசினின் பாக்டீரியா எதிர்ப்பு காரணமாக முகப்பருவிலிருந்து நிவாரணம் தருகிறது. ஆனால். பச்சை பூண்டை நேரடியாக சருமத்தில் தடவுவது நல்லதல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. கொலஸ்ட்ரால் குறைப்பு: கல்லீரல் கொழுப்பின் களஞ்சியமாகும். கல்லீரலில் உள்ள கொழுப்பின் தொகுப்பைக் குறைப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது பூண்டு.

4. நீரிழிவு நோய் பாதுகாப்பு: நீரிழிவு நோயாளிகள் உணவுக்கு முன் பொடி வடிவில் பூண்டை எடுத்துக்கொள்ளும்போது உணவுக்குப் பிறகு இரத்த குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பதைக் குறைக்கிறது. மற்றும் வகை 2 நீரிழிவு பாதிப்புள்ளவர்களின் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.

5. சளி பாதிப்புகளுக்கு நிவாரணம்: பூண்டு ஜலதோஷம் மற்றும் பிற காய்ச்சல் போன்ற அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய் பாதிப்புகளை குறைக்கிறது.

6. இதய ஆரோக்கியம் மேம்பாடு: இரத்த அழுத்தம் ,கொழுப்பின் அளவைக் குறைப்பது மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுப்பதன் மூலம் பூண்டு இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது எனலாம். அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூலம் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை  மேம்படுத்துகிறது.

7. மூளைத்திறன் பாதுகாப்பு: அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும், நரம்பியக்கடத்தல் நோய்களிலிருந்து பாதுகாப்பதன் மூலமும், டிமென்ஷியா அபாயத்தைக் குறைப்பதன் மூலமும் பூண்டு மூளைக்கு நன்மை செய்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்பர் கலவைகள் நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்த மன கூர்மை மற்றும் நினைவாற்றலைத் தக்கவைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
இன்டர்வியூ செல்லும்போது செய்யும் தவறுகள்: ஆய்வுகளில் தெரியவந்த உண்மைகள்!
பூண்டு

8. எடைக் குறைப்பு: வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, பசியைக் குறைப்பது மற்றும் கொழுப்பை எரிப்பது உள்ளிட்ட வகைகளில் எடை குறைப்புக்கு பூண்டு உதவுகிறது.  நச்சு நீக்கம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தி சிறந்த எடை பராமரிப்பைத் தருகிறது.

9. புற்றுநோய் தடுப்பு: பூண்டிலுள்ள சல்பர் கலவைகள், குறிப்பாக அல்லிசின், வலுவான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. பூண்டின் மருத்துவ பண்புகள் பெருங்குடல், வயிறு மற்றும் புரோஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களின் அபாயங்களைக் குறைக்கும். புற்றுநோயைத் தடுக்கும் உணவில் பூண்டின் பங்கு அதிகம்.

10. வயிற்றுப் புண்ணுக்கு நிவாரணம்: பூண்டின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக வயிற்றுப் புண்களுக்கு நிவாரணமாகிறது. இது அல்சர் உருவாகக் காரணமான பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது. வயிற்றுப் புண்களை தடுப்பதற்கு இயற்கை தீர்வாகிறது பூண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com