ஆனி மாத ரகசியங்கள்: உங்களை தேடி வரும் கோடீஸ்வர யோகமும், தோஷ நிவர்த்தி வழிகளும்!

Aani month benefits - ஆனி மாதம்
Aani month benefits - ஆனி மாதம்AI Image
Updated on

த்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதமான ஆனி மாதம் தேவர்களின் மாலைப்பொழுது என்று கூறப்படுகிறது. இது தமிழ் மாதங்களில் மூன்றவது மாதமாக மலர்கிறது. இந்த மாதத்தில் மிதுன ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். மேலும் ஆனி மாதம் இளவேனிற் காலம். கடுங்கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசி நம்மை குளிர்விக்கும்.

ஆனி மாதத்தில்தான் தேவர்களைக் காப்பாற்ற திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரம் தேய்பிறை துவாதசியன்று வருகிறது. பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து மந்தார மலையைத் தாங்கி தேவர்கள் அமிர்தம் கடைந்தெடுக்க உதவிய அவதாரமே கூர்மாவதாரம்.

ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி மாத உத்திர நட்சத்திரன்று ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது.

ஆனி மாதம் நடக்கும் நடராஜப் பெருமானின் ஆனித் திருமஞ்சன மகிமைகள்:

ஆனித் திருமஞ்சனத்தின் போது ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். எல்லா சிவாலயங்களிலும் மாலை நேரத்தில் ஆனி மாத திருமஞ்சனம் நடைபெறும். வைணவத்தலங்களில் தலை சிறந்த ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி மாத கேட்டை நட்சிரத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்.

குருபூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பூர்ணிமா வருவதும் இந்த மாதத்தில்தான். இந்த நாளில் அனைவரும் தங்கள் குருவை வணங்கி ஆசி பெற திருவருளும் குருவருளும் சேர்ந்து கிடைக்கும். பொதுவாக நிறைய கோவில்களின் கும்பாபிஷேகம் ஆனி மாதத்தில்தான் நடைபெறும்.

திருப்புகழை நமக்களித்த மகான் அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில்தான் பிறந்தார். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் வருகிறது.

'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று சிறப்பித்துச் சொல்லப்படும் அருமையான திருவாசகம் அருளிய மகான் மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார். தன் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய மாணிக்கவாசகர் சிதம்பரம் தலத்தில் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஈசனோடு இரண்டற கலந்தார். இதையொட்டி சிதம்பரத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஏகாதசிகள் அனைத்துமே விசேஷமானவை என்றாலும், ஆனிமாத தேய்பிறை ஏகாதசி 'யோகினி ஏகாதசி' என்ற பெயருடன் விஷ்ணு வழிபாட்டுக்கு சிறந்து விளங்குகிறது. அன்று தான் அழாகாபுரி மன்னனான குபேரன் ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு தன் நோயைப் போக்கிக்கொண்டான் என்று கூறப்படுகிறது.

Aani month benefits - ஆனி மாதம்
Aani month benefits - ஆனி மாதம்AI Image

பொதுவாகவே நிறைய கோவில்களில் ஆனி மாத பௌர்ணமியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதைக் காணலாம். திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்த வெளியில் கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன் மீது அபிஷேகம் செய்வார்கள். பிறகு அந்த மாம்பழங்களை பக்தர் களுக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுவார்கள்.

இதேபோல திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோவிலிலும் ஸ்ரீ தாயுமானவர் சுவாமிக்கு வாழப்பழத்தார்கள் சமர்ப்பித்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழவேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜை நிறைவு பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்.

இதையும் படியுங்கள்:
மதுரையில் ஆன்மீகக் கொண்டாட்டம்: மீனாட்சி அம்மன்- கள்ளழகர் கோவில்களில் வசந்த உற்சவம் தொடக்கம்!
Aani month benefits - ஆனி மாதம்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் ஆனி மாதம் பௌர்ணமியையொட்டி சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வரும்போது காரைக்கால் அம்மையார் திருவுருவச்சிலையையும் தரிசிக்கலாம். அப்போது பக்தர்கள் மாடி வீடுகளில் ஏறி, மேலே நின்று கொண்டு மாம்பழங்களை கூடை கூடையாக காரைக்கால் அம்மையார் மேல் அபிஷேகம் செய்வார்களாம்.

உங்கள் தோஷங்களை நீக்கி வாழ்வில் வளம் தரும் ஆனி மாதம் விரதங்கள்:

தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி தெப்பத்திருவிழாவும் நடைபெறும். முக்கியமாக மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத்திருவிழா அன்று நடைபெறும்.

இந்த ஆன்மீக வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், ஆனி மாதத்தின் அரிய விரத நாட்களைச் சரியாகப் பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தில் உள்ள தீராத நவக்கிரக தோஷங்களை நீக்கிக்கொள்ளலாம். மேலும், குபேரனின் அருளைப் பெற்றுத்தரும் யோகினி ஏகாதசி மற்றும் குருவருளைப் பெருக்கும் வியாச பூர்ணிமாவின் சூட்சுமங்களை உணர்ந்து, உங்கள் பொருளாதாரத் தடைகளை உடைத்து வாழ்வில் நீடித்த செல்வ வளத்தையும் மன அமைதியையும் பெறமுடியும்.

logo
Kalki Online
kalkionline.com