
அம்மனுக்குாிய மாதமான ஆடி மாதம் முடிவடைந்து ஆவணி பிறக்கிறது. ஆவணியும் விஷேசம், பண்டிகை, வைபவங்களுக்கு உாியதே. ஆடி முடிந்து ஆவணி வந்தாலே டாப்புதான் போங்க!
தேய்பிறை அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தியுடன் துவக்கம். இது இந்த தமிழ் ஆண்டின் ஐந்தாவது மாதமாகும். சூாியன் சிம்மமாதத்தில் பிரவேசிப்பதால் சிம்ம மாசமாகும் .
இந்த மாதம் கேரளாவின் முதல்மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதனால் சிராவண மாதமாக அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் நரியை பரியாக்கிய திருவிளையாடல்கள் ஆவணி மூலத்தில் நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.
இந்த மாதத்தில் ஆவணி அவிட்டம் சிறப்பு வாய்ந்தது. சாம வேத உபாகர்மா, இந்த மாதத்தில் வருகிறது.
அதோடு உலகளாவிய பிரசித்தி பெற்ற விநாயகர் சதுா்த்தி பூஜை எதிா்வரும் 27.8.2025ல் கொண்டாடப்பட உள்ளது.
விக்னம் தவிா்க்கும் விநாயகர்சதுா்த்தி விழா பாகுபாடில்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதே சிறப்பான ஒன்று.
எந்த ஒரு விஷயமானாலும், பூஜையானாலும், விநாயகப் பெருமானுக்கே முதல் வணக்கம். விநாயகர் பூஜையைப் பொருத்த வரையில் மஞ்சளில் பிடித்து வைத்தால் கூட அவர் ஆவாஹனம் ஆகிவிடுவாா்.
திருவோணம் சிறப்பு வாய்ந்தது போல கண்ணன், வாமனர், அவதரித்த மாதமும் ஆவணிக்கு பெருமை சோ்க்கும்.
ஆவணி மாதத்தில் மஹா சங்கடஹரசதுர்த்தி, ஆவணி செவ்வாய் ஆவணி ஞாயிறு, இந்த நாட்களிலும் கோவில்களில் வழிபாடுகளுக்கு பஞ்சமில்லை.
அதேபோல திருமணம், கிரஹப்பிரவேசம், உபநயணம் வளையல்காப்பு, சீமந்தம் ஏனைய சுப காாியங்களுக்கும் இந்த மாதம் சிறப்பானதே!
விவசாய வேலைகளுக்கும் உகந்த மாதமாகவே இந்த ஆவணி அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதே.
ஆக அத்தனை மாதங்களுமே சிறப்பு வாய்ந்தவைதான். விஷேசங்களுக்கு பஞ்சமில்லா மாதத்தில் இறைவனை வேண்டி நல்ல காாியங்களைத் தொடங்குவோம் நலம் பல பெறுவோம்.