

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் சன்னதியின் விமானம் சந்திர காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கல் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து அதனால் வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது இந்த அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத தனி சிறப்பு ஆகும்.
தென்காசி காசிவிசுவநாதர் ஆலயத்திற்கு தனித்துவம் உண்டு. கோபுரவாயில் வழியாக நுழையும் போதும் சரி வெளியே வரும் பொழுதும் சரி ஜில்லென்று காற்று நமது முகத்தில் அடிக்கும் அது அதிசயமான கட்டிடக்கலை நுணுக்கமும் வித்தியாசமான அமைப்பாகும்.
கன்னியாகுமரியின் அருகே உள்ள பழுவூர் சிவாலயத்தில் உள்ள ஆனந்த நடராஜருக்கு சீனி புட்டு படைத்து நோய் குணமானதும் நைவேத்தியம் செய்கிறார்கள் பச்சரிசி மாவு மாச்சீனீ நெய் ஏலக்காய் கலந்து சீனி புட்டு தயாரிக்கப்படுகிறது.
தஞ்சை குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் மேலை திருக்காட்டு பள்ளியின் அருகில் செந்தலை கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு மிகவும் அதிசயமாக ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகத்தின் போது லிங்கத்தின் மேல் சந்திரரேகை பட்டு பிரகாசிக்கின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.
கும்பகோணம் அருகில் உள்ள திருநீலக்குடி சென்று அங்குள்ள மனோக்ய நாத சுவாமிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் நோய்கள் குணமாகும். பதினோரு லிட்டர் நல்லெண்ணெய் ருத்ரவதாண்டவமாடய சிவனுக்கு அபிஷேகம் செய்ததாக வரலாறு சொல்கின்றன. தைல கடேஸ்வரர் என்றும் நீலகண்டேஸ்வரர் என்றும் அங்குள்ள சிவன் அழைக்கப்படுகிறார்.
திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில் இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் மிகவும் வித்தியாசமானது. காலை வேளையில் புழுங்கல் அரிசி சோறும் கீரையும் படைக்கப்படுகிறது. இரவில் வேகவைத்த பாகற்காயோடு சோறு படைக்கப்படுகிறது. இவற்றை ஈசனின் கருவறைக்கு முன் உள்ள கருங்கல் மேடையில் வைத்து விடுவார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் மிகவும் அதிசயமான காட்சியை காணலாம். இந்த கோவிலில் பார்வதி தேவியின் மடியில் பரமசிவன் படுத்திருப்பது போல காட்சி தருகிறார். பாற்கடலில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த விஷத்தை குடித்த சிவன் ஓய்வெடுக்கும் பொருட்டு பார்வதி தேவியின் மடியில் தலை சாய்ந்ததை இந்த காட்சி நினைவுபடுத்துகிறது.
எந்த கோவிலுக்கு சென்றாலும் கருவறையை வணங்கிவிட்டு முதல் பிரகாரத்தின் வழியாகத்தான் கோவிலை சுற்றி வரும் வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைக்கும் ஆனால் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களிலேயே கருவறையை சுற்றி வரும் வகையில் உள்பிரகாரம் கொண்ட அமைப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி கோவில் மட்டுமே உள்ளது இங்குள்ள கைலாசநாதர் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த வசதி இருக்கிறது.
திருச்சி தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள திருத்தலம் திருவெறும்பூர் இங்குள்ள சிவன் தலை சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் தாருகாசுரன் என்ற அரக்கனுக்கு பயந்த தேவர்கள் எறும்பு வடிவெடுத்து சிவனை வழிபட்டு வந்தார்கள். சிறிய பிராணி ஆன எறும்பின் வழிபாட்டை ஈசன் தன் தலை சாய்த்து ஏற்றுக்கொண்டார். இதனால் திருப்வெறும்பூர் என வழங்கப்படுகிறது. இன்றும் கூட மூலஸ்தானத்தில் சிவன் தலை சாய்ந்திருப்பதை காணலாம்.