
செவ்வந்தி கல்லின் நிறம் ஊதா. இது சிலிகா என்ற ரசாயனக்குழுவைச் சேர்ந்தது. இதன் உருவம் ஸ்படிக அமைப்பில் இருக்கும். இது மெட்டா மார்பிக் ரக பாறைகளில் இருக்கும். ஆறு பட்டைகள் கொண்ட வடிவத்தில் இருக்கும். மங்கலான கற்களிலிருந்து தெள்ளத் தெளிவான கற்கள் வரை இருக்கும். இதனுடைய விளைச்சல் தரம் கொண்டுதான் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதிக ஒளி ஈர்ப்பு உள்ள கற்கள் அதிக விலையிலும் நிறம் குறைவாக உள்ள கற்கள் விலை குறைவாகவும் இருக்கும். இது உயர் இரத்தின வகையைச் சார்ந்தது. யார் வேண்டுமானாலும் அணியலாம். ஒருவரின் ராசி நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் இந்த செவ்வந்திக்கில் அணியலாம். சிறு குழந்தை முதல் முதியவர் வரை அணியலாம்.
கனக புஷ்ப ராகத்தை அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள் அது இல்லாதபோது இதை மாற்று ரத்தினமாக அணியலாம். இவை இரத்தினங்களாக மட்டும் இல்லாமல் மாலை வடிவங்களிலும் கிடைக்கிறது. இதை ரெய்கிக்காக பலரும் உபயோகப்படுத்துகின்றனர்.
இதன் பயன்கள்
இதை அணியும் போது மனதில் சந்தோஷம் ஏற்படும். கெட்ட எண்ணங்கள் விட்டு விலகும். மனம் தெளிவு பெறும். குழப்பங்களிலிருந்து விடுபடுவர். செவ்வந்தி கல்லை வீட்டில் வைக்கும் போது நல்ல அதிர்வுகளை வீட்டில் இருப்பவர்களால் உணர முடியும். ஒருவர் உடல்நிலை சரியில்லாத போது அந்த அறையுள் செல்ல ஒருவகையான இறுக்கம் இருக்கலாம். அந்த இடத்தில் செவ்வந்திக்கல் பிரமிடை வைத்தால் அந்த சூழ்நிலை மாறுவதை உணர முடியும்.
செவ்வந்தி ராசிக்கல் மோதிரம்
குரு கிரகத்தின் ஒளிக்கதிர்கள் யாரெல்லாம் ஜாதக ரீதியாக பெற வேண்டும் என்றுள்ளதோ அவர்கள் செவ்வந்திக்கல் மோதிரம் அணியும் போது நல்ல பலன் கிடைக்கும். அழகுக்காக பயன்படுத்தும் வைரம், மாணிக்கம் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் மாற்றி அணியலாம். ஆனால் ராசிக்காக அணியும் மோதிரம் டாலர்களை ஒருவர் அணியும் தருவாயில் மற்றவர் அதை பயன்படுத்தக் கூடாது.