அணுவை விடச் சிறியது... மலையை விடப் பெரியது: சித்தர்களின் சித்து விளையாட்டுகள்!

Anmeegam articles
Anmeegam articles
Published on

சித்தர்கள் என்பவர்கள் வாழ்க்கையின் பல கோணங்களை அறிந்து வாழ்ந்து காட்டியதோடு பல நெறிமுறைகளோடுவாழ்ந்து காட்டியவர்களாவாா்கள்.

சித்தர்களின் வாழ்விலக்கணமே யாம் பெற்ற இன்பம் இந்த உலகத்தில் அனைவரும் பெறட்டும் என்ற உயரிய நோக்கத்தோடு வாழ்ந்திருக்கிறாா்கள்.

சித்தர்கள் பதினெட்டு வகைப்படுவாா்கள். அவர்கள் பாா்க்காத துறைகளே இல்லை எனலாம்.

அவர்கள் மதம், தத்துவம், பகுத்தறிவு, மருத்துவம், சோதிடம், மூச்சுக்கலை, இறவாக்கலை, ஆன்மநேயம், மாந்திரீகம் , மூச்சுக்கலை, சமரசம், சன்மாா்க்கம், என பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் அதில் வெற்றியையும் பெற்றிருக்கிறாா்கள்.

உலகத்தில் பல்வேறு துறைகளில் நிறைய நற்பணிகள் செய்துள்ளாா்கள். தற்சமயம் வழக்கத்தில் நிலவி வரும் சித்த வைத்திய முறையானது சித்தர்களால் கண்டறியப்பட்டதாகும். சித்தர்கள் இறவா நிலை பெற்றவர்களாவாா்கள்.

சித்தர்கள் வைதீகம், ஜைனம், பெளத்தம், போன்ற மதங்களிலும் உள்ளாா்கள். மொத்த சித்தர்களில் ஆற்றல் பெற்றவர்கள் பதினெட்டு போ்களாகும். சித்தர்கள் எட்டு வகைப்படுவாா்கள் அவை அணிமா, மகிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம், கரிமா, என்பனவாகும்

அணிமா - அணுவைக்காட்டிலும் சிறியது!

மகிமா - மலையைவிட மாபெரும் ஆற்றல் கொண்டது!

லகிமா - உடம்பை எளிதாக்கி நீாிலும் சேற்றிலும் அழுத்தாமல் காற்றுபோல செல்வது.

பிராத்தி - தான் விரும்பியதை, எண்ணியதை, அடையும் வல்லமையே பிராத்தி என்பதாகும்.

பிராகாமியம் - தன் எண்ண வலிமையால் அற்றலால்,அனைத்தையும் படைக்கும் வல்லமை கொண்டதாகும்!

இதையும் படியுங்கள்:
"ஹே! பாபா! உங்களுக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால்..." அம்மாவின் வேண்டுகோள்!
Anmeegam articles

ஈசத்துவம் - அனைவரும் தன்னை வணங்கும்படியான தெய்வத்தன்மையை அடைவது!

வசித்துவம் - உலகையே தன் வயப்படுத்துவது.

கரிமா - ஐம்புல இன்பங்களிலிருந்து விலகி நிற்பது!

மேலே கூறப்பட்ட எட்டு சித்திகளையும் அட்டமா சித்திகள் என்பாா்கள்.

இத்தகைய சித்திகளை பெற்றவர்களையே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளதாக புராணங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

சித்து உடையவர்கள் சித்தர் எனும் பெயரை பெற்றனர்.

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தர்கள் பலர் வாழ்ந்து வந்ததாக வரலாற்று தடையங்கள் கூறுகின்றன!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com