வடக்கின் புண்ணிய நகராம் காசிக்கு இணையான திருத்தலம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில்.
இக்கோயில் சிறப்புகள்
தென்காசியில் பிறந்தாலும் முக்தி. இருந்தாலும் முக்தி. இறந்தாலும் முக்தி என்கிறது ஸ்தல புராணம்.
மூன்று பிரிவுகள்
சுவாமி கோவில், முருகன் கோவில், உலக அம்மன் கோவில் என மூன்று பிரிவுகளாக கோவில்கள் ஒருங்கே அமைய பெற்றுள்ளது மிக சிறப்பு.
முதல் பிரிவு:
கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல் புரிய, உள்ளே கருவைறையில் லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் காசி விஸ்வநாதர். சுயம்புவாக தோன்றிய மூர்த்தி என்றாலும் சற்று பிரம்மாண்டமான தோற்றம் உடையவர். இவருக்கு நாகா பரணம் அணிவித்து விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது.
கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகிகள் காவல் புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மருகரத்தை கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் ஆனந்தமாய் காட்சியளிக்கிறார் உலகாம்பிகை அம்மன்.
பராசக்தி பீடம்:
கிழக்கு நோக்கிய சன்னதியில் அகத்தியர் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீசக்கர பீடமே பராசக்தி பீடமாக விளங்கி வருகிறது. இந்த பீடத்திற்கு நேர் எதிரில் லிங்க சொரூபத்தில் சிவனும் எழுந்தருளி உள்ளார்.
ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள கோபுரம்.
ஒரே நேர் கோட்டில் எந்தவித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்து காற்று வீசும் வண்ணம் கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
கோவிலிற்கும், கோபுரத்திற்கும் இடையில் பறந்த வெளிபரப்பு பொதியமைலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோயிலிற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல் மேற்கிலிருந்து கிழக்காக காற்று வீசுகிறது. கோயிலை நோக்கி செல்லும் பக்தர்கள் காற்று இல்லாமலேயே காற்று சுழன்று வீசுவது போல் நமக்கு மிகவும் சிறப்பாக தழுவிச் செல்லும் அனுபவம் ஏற்படும்.
கோவில் திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ளது. மூன்று மலைகள் சேர்ந்திருப்பதால் திரிகூட மலை என அழைக்கப்படுகிறது.
தல சிறப்பு:
இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி / கண்வமுனிவர் போன்றோர் இத் தலத்தை வழிபட்டுள்ளனர்.
திருவிழாக்கள்:
மாசிமக பெருவிழா, பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். புரட்டாசி கொலுத் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், ஆவணி மூல தெப்ப திருவிழா, தை அமாவாசை பத்திர தீப திருவிழா மிக முக்கியமான விழாக்களாக இங்கு கொண்டாடப்படுகின்றன.