பிரதோஷ வழிபாட்டில் இத்தனை வகைகளா?

Pradosha worship
Pradosha worship
Published on

தினசரி பிரதோஷம்: தினமும் இரவும், பகலும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். நித்திய பிரதோஷத்தை ஐந்து வருடங்கள் முறையாக செய்பவர்களுக்கு ‘முக்தி’ நிச்சயம் என்கிறது சாஸ்திரம்.

பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்கு பிறகு, சுக்ல பட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13வது திதியாக வருவது ‘திரயோதசி’ பட்சப் பிரதோஷம் ஆகும். இந்த திதியில் மாலை நேரத்தில் அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமான மயிலாப்பூர் ‘கபாலீஸ்வரனை’ வழிபடுவது சிறப்பாகும்.

மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13வது திதியாக வரும் ‘திரயோதசி’ மாதப் பிரதோஷம் ஆகும். மாலை நேரத்தில் ‘பாணலிங்க’ வழிபாடு செய்வது உத்தமம்.

நட்சத்திர பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய ‘திரயோதசி’ திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இக்காலத்தில் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து இரட்டை பலனை அடையலாம்.

இதையும் படியுங்கள்:
மகாலட்சுமி தாயார் தாமரை மலரில் வீற்றிருப்பது ஏன்?
Pradosha worship

திவ்ய பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும் சதுத்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்ய பிரதோஷம்’ ஆகும். இக்காலத்தில் ‘மரகத லிங்கேஸ்வரருக்கு’ அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வ ஜன்ம வினை முழுவதும் நீங்கும்.

தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களை தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட, சொந்த வீடு அமையும்.

சப்த ரிஷி பிரதோஷம்: வானத்தில் ‘வ’ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்கள், ‘சப்தரிஷி மண்டலம்’ ஆகும். இது ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரை வானில் தெளிவாக தெரியும். இச்சமயம் இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் தரம் பார்க்காது அருள்புரிவார்.

மகா பிரதோஷம்: ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம் சனிக்கிழமை, திரயோதசி தினமும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ ஆகும். இந்த நாளில் தண்டீசுவர ஆலயம், திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீ வாஞ்சியம், திருக்கோடிகாவல் ஆகியவற்றை வணங்குவது சிறப்பு.

ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒருமுறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ‘ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ அத்தனை முறை ஓதி விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.

அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரீ பிரதோஷம் என்று பெயர். இக்கால வழிபாடு தடைப்பட்ட திருமணம் நடைபெறும் உதவும்.

கந்த பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் எனப்படும். இந்த பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும். இது வருடத்திற்கு ஆறு முறை வரும்.

இதையும் படியுங்கள்:
கோயில் கும்பாபிஷேகத்துக்கு உதவி செய்வதில் இத்தனை புண்ணியமா?
Pradosha worship

மேலும், வருடத்திற்கு மூன்று முறை வரும் பிரதோஷம் திரிகரண பிரதோஷம் என்றும், நான்கு முறை வரும் பிரதோஷம் பிரம்ம பிரதோஷம் என்றும், ஐந்து முறை வருவது அட்சர பிரதோஷம் என்றும், ஏழு முறை வருவது சட்ஜபிரபா பிரதோஷம் என்றும் எட்டு முறை வருவது அஷ்டதிக் பிரதோஷம், என்றும், அரிதாகவே ஒன்பது முறை வந்தால் நவகிரக பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

துத்த பிரதோஷம்: அரிதிலும் அரிதாக வருடத்தில் பத்து மகா பிதோஷம் வருவது துத்த பிரதோஷம் ஆகும். இந்த பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண் பார்வை பெறுவார், முடவன் நடப்பான், குஷ்ட ரோகம் நீங்கும், கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com