துளசி மாலை அணியப்போகிறீர்களா? இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

Tulsi garland
Tulsi garland
Published on

பெருமாளுக்கு உகந்த துளசிக்கு இணையான புனிதமான மாலைகளில் ஒன்று துளசி மாலை. தெய்வ கடாட்சம் பொருந்திய துளசி மாலையை நீங்கள் அணியப்போகிறீர்கள் என்றால் அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

துளசி மாலை அணியும்போது செய்ய வேண்டியது:

* துளசி மாலை என்பது துளசி இலைகளால் செய்யப்பட்ட இந்து பாரம்பரியத்தில் ஆன்மிக அணிகலனாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த துளசி மாலை ஆன்மிக ரீதியிலும் உடல்நல ரீதியிலும் நல்லதொரு மாற்றங்களைத் தரும்.

* துளசி மாலையை மரியாதையாகப் பயன்படுத்தினால் நல்ல ஆற்றலை கொடுக்கும். இந்த மாலையை அணியும்போது நம் மனம் தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

* தூய துளசி மாலை ஏராளமான பிரார்த்தனைகள் மற்றும் மந்திரங்கள் சொல்லி தயார் செய்யப்படுவதால் அதை அணியும்போது உள்ளமும் மனதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

* துளசி மாலை அணிந்தவர்களை பெருமாள் காப்பாற்றுவார் என்பது ஐதீகம். இந்த மாலையை அணியும் ஒருவர் இறந்தால் வைகுண்ட பதவி அடைவார் என்பது நம்பிக்கையாகும்.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் கோயில் கொடிமரக்கதை தெரியுமா?
Tulsi garland

* துளசி மாலையை கழுத்தில் அணிந்தாலும் சரி, ஜபம் செய்ய பயன்படுத்துவதானாலும் சரி, துளசி மாலையை வாங்கி வந்ததும் அதை மஞ்சள் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.

* கங்கை தண்ணீர் இருந்தாலோ அல்லது சுத்தமான நீர், கோமியம் ஆகியவற்றால் ஒரு முறை துளசி மாலையை கழுவி, சுத்தமான துணியால் துடைத்து பூஜை அறையில் மகாவிஷ்ணுவின் படத்திற்கு அருகே வைத்து வழிபட்டுதான் புதிதாக அணியப்போகும் துளசி மாலையால் தனக்கு நன்மைகளும் இறைவன் அருளும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அதை அணிந்துகொள்வது நல்லது.

* தியானம், மந்திரம், பிரார்த்தனை ஆகியவற்றை உச்சரிக்கும்போது துளசி மாலையை அணிவது சிறப்பு.

துளசி மாலை அணிபவர்கள் செய்யக் கூடாதது:

* துளசி மாலை அணிபவர்கள் அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது.

* மது, புகை, புகையிலை போன்ற போதை வஸ்துக்களையும் பயன்படுத்தவே கூடாது.

இதையும் படியுங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
Tulsi garland

* ஒருவர் அணியும் துளசி மாலையை மற்றவர்கள் எக்காரணம் கொண்டும் அணியவே கூடாது.

* குளிக்கும்போதும், நீச்சல் பழகும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் துளசி மாலையை அணியவே கூடாது.

பலன்கள்:

* துளசியில் செய்யப்படும் ஜபமாலை அணிவதால் மன அமைதியும், குடும்பத்தில் துன்பம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

* துளசி மாலையை கழுத்தில் அணிவதால் உடல் சுத்தமாவதோடு, பல நோய்களும் குணமாகும்.

* செரிமான சக்தி, அதிகக் காய்ச்சல், சளி, தலைவலி, சரும நோய்கள், மூளை நோய்கள் மற்றும் வாயு தொடர்பான பல நோய்களுக்கு துளசி மாலை நன்மை தருவதாக நம்பப்படுகிறது.

இது தவிர, துளசி மாலை அணிவதால் புகழ், பெருமை மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com