

சபரிமலை மற்றும் பழனிமலை, ஸ்ரீசைலம் போன்ற இடங்களுக்கு செல்வதாக பிரார்த்தித்துக் கொண்டு செல்வதானால் விரதங்கள் இருந்து கால்நடையாக நடந்து செல்வதைக் காணலாம். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு குழுவாக செல்வார்கள். போகும்பொழுது பக்திப் பாடல்களை பாடிக்கொண்டு போவதைக் காணலாம். முதியோர்கள் முதல் இளைய தலைமுறையினர் வரை இடைவிடாமல் உரக்க பேசிக்கொண்டும், சரணம் சொல்லிக் கொண்டும் போவதன் காரணம் என்னவென்றால் காடு மலைகளைக் கடந்து செல்லும் பொழுது சிலர் காலில் செருப்புக்கள் அணிவதையும் தவிர்த்துவிடுவர்.
இரவு பகலாக நடக்கும் பொழுது அங்குள்ள மிருகங்கள் தாக்குவதை காணமுடியும். சிலர் மெல்ல நடந்து முன் பின்னாக வருவதுண்டு. சிலர் வேக நடை போடுவர். பின் தங்கிவிட்டால் மிருகங்கள் தாக்கும் என்ற அச்சத்தாலும் இதுபோல் நடப்பதுண்டு.
ஏதாவது அச்சுறுத்தல் வந்தால் ஒருவரை ஒருவர் சாமி என்று கூறி பிரச்னையை பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் உதவி செய்வதற்கு வசதியாக இருக்கிறது. நீண்ட நடையின் சுமை தெரியாமல் இருப்பதற்காகவும் பக்தி பாடல்கள் பாடுவதுண்டு.
மேலும் எதிர்பார்க்கும் நன்மைகள் கைகூடுவதற்கு கண்டிப்பாக விரதம் கடைபிடித்து மலையேற வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் முதல் அனைத்து பக்தர்களும் விசுவாசிக்கின்றார்கள். விரதம் கடைபிடித்தல் என்பது பக்தர்களுக்கு ஆத்ம திருப்தியை அளிப்பதாகவும், பக்தியை தவறாமல் கடைபிடிப்பதாகவும், இதனால் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரும், நினைத்தது நிறைவேறும்,முற்றிலும் மனதிற்கும் உடம்பிற்கும் உற்சாகம் கிட்டும் என்று நம்புகின்றனர். உரக்க சரணம் சொல்லும்போது உடல் வேதனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது.
மாமிச வகைகள் தவிர்த்த தாவர உணவு முறை, மனித உடலின் உள்ளுறுப்புகளில் ஒரு புனர்சிருஷ்டி நடத்துகின்றது என்று கூறலாம். இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற திடமான, தெளிவான, உறுதியான சிந்தனைக்கு வழிவகுப்பது தாவர உணவுகளே!
அநாவசியமாக உடலில் சேர்ந்து வரும் கொழுப்பு கரைந்து போய், மலையேறும் உடற்பயிற்சி ஊக்கமூட்டுகின்றது. உரக்க சரணம் சொல்லும்போது காட்டில் உள்ள கொடிய விலங்குகள் பயந்து விலகும்.
மேலும் ஒரே சொற்களை திரும்பத் திரும்பக் கூறுவதனால் உண்டாகும் ஒரு சிறப்பான மனநிலையில் மிகக் கடினமான விஷயமான மலை ஏறுதலை சுலபமாக செய்ய இயலும் என்று அறிவியலும் அனுபவமும் அங்கீகரிக்கின்றது. இதுவே விரதம் பூண்டு சரணம் மற்றும் ஒரே சொல்லை திரும்பத் திரும்ப உரைக்கும் பக்தி பரவசத்தின் பயன்கள்.