
சித்த மருத்துவத்தில் படிகாரக்கல் நிறைய பயன்கள் தருகிறது. இந்த படிகாரக்கல் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்னையை தீர்க்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும் எதிர்மறை ஆற்றலை விலக்கி நேர்மறையான ஆற்றலை கொடுக்கிறது. இந்தப் படிகாரக்கல்லின் பயன்களைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
படிகாரக்கல்லை ஒரு சிறிய கண்ணாடி பவுலில் போட்டு வீட்டில் வைக்கும் போது அது நேர்மறையான ஆற்றலை வீட்டின் மூலை முடுக்கு அனைத்திற்கும் பரவச் செய்கிறது.
ஒரு சிவப்பு துணியில் படிகாரக்கல்லை கட்டி தொழில் செய்யக்கூடிய இடத்தில் நிலைவாசல்படியில் கட்டும் போது தொழில் நன்றாக செழிப்பாகவும், லாபகரமாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய் பகவான் ஆதிக்கம் பெற்ற சிவப்புத்துணியில் படிகாரக்கல்லை வைத்து செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரையில் கட்டி வைக்கும் போது தொழில் முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
சிலருக்கு தூங்கும் போது கெட்டக் கெட்ட கனவுகள் வரும். இதனால் நிம்மதியான தூக்கம் இன்றி மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்கள் இந்த படிகாரக்கல்லை தலைக்கு அருகில் தூங்கும் போது வைத்துக் கொண்டால், நிம்மதியான உறக்கம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
வீட்டின் நிலைவாசல்படியில் ஒரு சின்ன கிண்ணத்தில் இந்த படிகாரக்கல்லை போட்டு வைத்து விட்டால், அந்த வீட்டில் வாஸ்து ரீதியாக இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் விலகும் என்று சொல்லப்படுகிறது.
படிக்கும் குழந்தைகளின் அறையில் படிகாரக்கல்லை வைப்பதின் மூலமாக அவர்களுக்கு படிப்பதில் ஆர்வமும், நியாபக சக்தியை நன்றாக தூண்டும் என்று சொல்லப்படுகிறது.
விபத்துக்கள் வராமல் இருப்பதற்காக வாகனத்தில் படிகாரக்கல்லை கட்டுவதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
சில இடங்களில் தலைமுடிக் கொண்டு பரிகாரக்கல் கட்டப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். இது பில்லி, சூனியம், ஏவல், தீயசக்திகளை அண்ட விடாமல் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
படிகாரக்கல்லில் மருத்துவ ரீதியாகவும் நிறைய பயன்கள் உள்ளன. படிகாரக்கல்லை தண்ணீரில் போட்டு கலந்து வாய்க்கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி போகும்.
உடலில் ஏற்படும் சிறுக்காயங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், ரத்தப்போக்கு நிக்கவும் படிகாரக்கல் பயன்படுகிறது.
மேலும் தண்ணீரில் படிகாரக்கல்லை போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவினால் முகச்சுறுக்கம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீக ரீதியாகவும், மருத்துவரீதியாகாவும் பயன்களைக் கொண்ட படிகாரக்கல்லை நீங்களும் உங்கள் வீட்டில் பயன்படுத்தி நன்மையைப் பெறுங்கள்.