குலதெய்வம் கோவில் மண்ணை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம்!

Kula deivam temple
Kula deivam temple
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் சில பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து வைக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. இதனால் அதிர்ஷ்டம் ஏற்படும், செல்வ செழிப்பு பெருகும் என்ற நம்பிக்கை உண்டு. அதில் முக்கியமான ஒன்று குலதெய்வம் கோவிலில் இருந்து எடுத்து வரக்கூடிய மண். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்னைகள் ஏற்படும் போது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தால் அவை தீரும் என்று சொல்வதுண்டு. திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் போன்ற பிரச்சனை தீர குலதெய்வம் கோவிலுக்கு போய்வருவது நல்லது. அத்தகைய குலதெய்வம் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை வீட்டில் வைப்பதால் நன்மைகள் ஏராளமாக கிடைக்கும்.

குலதெய்வம் கோலிலில் இருந்து எடுத்துவரப்படும் மண்ணில் அந்த குலதெய்வமும் வாசம் செய்யும். அத்தகைய புனிதமான மண்ணை வீட்டில் கொண்டு வந்து மஞ்சள் துணியில் விபூதி, குங்குமத்தையும் சேர்த்து கட்டி வைத்து 48 நாட்கள் பூஜை செய்வது குலதெய்வத்தின் சக்தியை மேலும் அதிகரிக்கும்.

இந்த மண்ணை உடல்நல குறைவாக இருப்பவரின் அறையில் வைக்கலாம். தொழில் செய்யும் இடத்தில் தொழில் முன்னேற்றம் அடைய வைக்கலாம். கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டால், அவர்களின் படுக்கையறையில் வைக்கலாம். கண் திருஷ்டி அதிகமாக இருந்தால், வீட்டின் நிலைவாசல்படியில் கட்டி வைக்கலாம். குலதெய்வம் கோவிலில் இருந்து எடுத்து வந்த மண்ணிற்கு வாரத்தில் வெள்ளி, செவ்வாய் நாட்களில் ஆராதனை காட்ட வேண்டும்.

இந்த மண்ணை வீட்டில் வைத்து வழிப்படுவது மூலம் பில்லி, சூன்யம், ஏவல், கண் திருஷ்டி போன்ற பிரச்னைகள் நீங்கி குடும்பத்திற்கு மென்மேலும் உயர்வு கிடைக்கும். இவ்வாறு எடுக்கப்பட்ட குலதெய்வம் கோவில் மண்ணிற்கு களங்கம் ஏற்படுவது போன்ற செயல்கள் செய்தால் பிரச்னைகள் மென்மேலும் அதிகரித்துவிடும்.

இதனால் எடுத்த குலதெய்வம் கோவில் மண்ணை வீட்டில் உள்ள பிரச்னைகள் தீர்ந்த பிறகு எடுத்த இடத்திலோ அல்லது ஏதேனும் நீர்நிலைகளிலோ கலந்து விடுவது நல்லது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குலதெய்வம் கோவில் மண்ணை நீங்களும் வீட்டில் வைத்து பூஜை செய்கிறீர்களா? என்று சொல்லுங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் பவனி வரும் பிரியாவிடை அம்மன் யார்?
Kula deivam temple
logo
Kalki Online
kalkionline.com