
புத்தர் ராஜ பரம்பரையில் பிறந்தவர். அவர் பிறந்த உடன் ஜோசியர் ஒருவரிடம் புத்தரின் ஜாதகத்தை கொடுத்து, புத்தரின் தலையெழுத்து எப்படி இருக்கும்? என்று கேட்டார் ராஜா.
ஜோசியர், புத்தர் தனது இளம் வயதிலேயே சன்யாசி ஆகி விடுவார் என்று சொன்னார்.
இது போதாதா… ? பெற்றோர் ஜாக்கிரதை ஆனார்கள். அவருக்கு அதாவது புத்தருக்கு வாழ்வில் உள்ள எந்த கஷடத்தையும் அவர் தெரிந்து கொள்ளக் கூடாது என்று திட்டம் போட்டு அரண்மனையிலேயே ஆசிரியர் வைத்து பாடம் கற்றுக் கொடுத்தார்கள்.
விதி விதி தான். அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஆம். பல்லக்கில் நகரை சுற்றி பார்க்க போனார் புத்தர்.
புத்தர் 3 விஷயங்களை கண்டு கொண்டார்.
1. மூப்பு
2. பிணி
3. மரணம்.
இதில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று உணர்ந்தார்.
மூப்பு, பிணி, மரணம் மூன்றையும் அறவே வெறுத்தார்.
உலகம் சரியாக இல்லை என்று உணர்ந்து பெற்றோர் பேச்சை கண்டு கொள்ளாமல் சன்யாசம் வாங்கி காட்டிற்கு அமைதியாக போய் சிந்தனை செய்ய விரும்பினார்.
அவ்வாறே அவர் போதி மரத்தின் அடியில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.
வெகு விரைவில் அவர் ஞானம் பெற்றார்.
அவர் வேதங்களை நம்பவில்லை. கடவுள் இல்லை என்று சொன்னார். சடங்குகள் மற்றும் விழாக்கள் அவசியம் இல்லை என்று சொன்னார்.
பிறகு அவர் அவரது சீடர்களுக்கு 8 போதனைகள் கொடுத்தார்.
நல்ல எண்ணம்,
நல்ல நோக்கம்,
நல்ல செயல்,
நல்ல தியானம்,
நல்ல பேச்சு,
அகிம்சை,
சேவை,
நல்ல ஒழுக்கம்,
என 8 கட்டளைகள் தான்
புத்த மதத்தின் வேதம்.
அவர் வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் தனது கட்டளைகளை விளக்கி பேசி உள்ளார்.
புத்த மதம் இந்தியாவில் தான் தோன்றியது. புது புது கருத்துக்கள் இங்கே மட்டுமே ஜொலித்தது.
ஆனால் துரதிருஷ்டம்,
புத்த மதம் இலங்கை, சீனா, ஜப்பான் என வெளிநாடுகளில் பரவியது.
இந்தியாவில் புத்தர் இறந்ததும் புத்த மதம் இல்லாமல் போனது.
ஏன்…?
இந்தியர்கள் வாழ்க்கை நெறி சிறப்பானது.
சனாதன தர்மா தான் இந்துவின் வாழ்க்கை முறை. வாழ்க்கை நெறி.
இந்த தர்மா தான் இந்தியர்களை காப்பாற்றுகிறது.
உண்மை, தியானம், சேவை, தானம், உழைப்பு, பொறாமை இல்லாமை, வஞ்சகம் இல்லாமை என அத்தனை நல்ல குணங்களை சனாதன தர்மா தன் அகம் வைத்து உள்ளது.
எனவே முகலாயர், பிரிட்டிஷ் மற்றும் புத்தர் போன்ற தீர்க்கதரிசியால் கூட இந்திய கலாச்சாரத்தை மாற்ற முடியவில்லை.
புத்தரின் 8 கட்டளைகள் சரியாகவே இருந்தது. ஆனால், அவர் கடவுள் இல்லை என்று சொன்னதும் (கடவுள் மறுப்பு; அல்லது கடவுள் பற்றிய மௌனம்), வேதத்தில் ஒன்றும் இல்லை என்று சொன்னதும், பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலும், வன்முறையான படையெடுப்புகள், இந்து சமயத்தின் மீள் எழுச்சி, அசோகர் போன்ற மன்னர்களின் ஆதரவு குறைந்தது, போன்றவையும் புத்த மதம் இந்தியாவில் இல்லாமல் போனதற்கு காரணமாகக் கூறப்படுகின்றன.
சீனா, இலங்கை மற்றும் ஜப்பானில் புத்த மதம் சிறப்பாக இருக்கிறது!