வீட்டில் கரப்பான் பூச்சி: கெட்ட சகுனங்களின் அடையாளம்! ஆன்மிக எச்சரிக்கை!

கரப்பான் பூச்சியைப் பற்றி ஜோதிடமும் வாஸ்து சாஸ்திரமும் கூறுவதை அறிந்துக் கொள்வோம்!
cakhroach and spirituality
cakhroach Image credit: Anderson pest solution
Updated on

ரப்பான் பூச்சிகள் வீட்டில் நுழைந்தால் அது நல்ல சகுனமல்ல. பொதுவாகவே கரப்பான் பூச்சி ஒரு வீட்டில் , ஒரு இடத்தில் தென்பட்டால் அந்த இடம் சுத்தமாக இல்லை என்பது அர்த்தம். மேலும் அங்கு விரைவில் நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது பொருள். இது வீட்டின் தூய்மை சார்ந்த பிரச்னையாக இருந்தாலும் இதன் பின்னால் ஆன்மீக காரணங்களும் உண்டு. 

சனாதன தர்மப்படி வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தின் அடிப்படையில் கரப்பான் பூச்சிகள் ஒரு இடத்தில் வசிப்பதற்கு தனிப்பட்ட பலன்கள் கூறப்பட்டுள்ளன. ஜோதிடத்தின்படி ஒவ்வொரு உயிரினங்களும் ஏதேனும் ஒரு கிரகங்களுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றன. அதேபோல் வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் உயிரினங்களை வைத்து அந்த வீட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்.

கரப்பான் பூச்சிகள் வீட்டில் உள்ள அசுத்தத்தின் அறிகுறிகளாக நாம் நினைக்கிறோம். ஆனால், கரப்பான் பூச்சிகள் வீட்டில் வசிப்பது ராகு கேது ஆகியவற்றின் பிரதிநிதியாக இருந்து, எதிர்மறை தாக்கங்களை வீட்டிற்குள் கொண்டு வருகிறது. அடிக்கடி சுத்தம் செய்தும் கரப்பான் பூச்சிகள் மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் வந்தால், எதிர்மறை கிரகங்களின் தாக்கம் கடுமையாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த சிறிய பூச்சிகளை எவ்வாறு விரட்டுவது? என்பதையும் அதன் பின்னால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம். ஜோதிடத்தின் கூற்றின்படி ராகு கேது ஆகியவை, வீட்டிற்குள் மன அழுத்தம் குழப்பம் பிரச்னைகள் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடியது. இது மட்டுமல்லாமல் வீட்டிற்கு ஏராளமான நிதி நெருக்கடியையும் , சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற விடாமல் தடையையும் ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் பூனை வளர்ப்பது வாஸ்துப்படி நல்லதா கெட்டதா.. இந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க!
cakhroach and spirituality

கரப்பான் பூச்சியுடன் ராகு கேதுக்கு என்ன தொடர்பு?

ஜோதிட சாஸ்திரத்தின் படி கரப்பான் பூச்சி இருட்டு மற்றும் தூய்மையற்ற இடங்களில் வாழக்கூடிய ஒரு உயிரினமாக இருக்கிறது. மேலும் அவை பெரும்பாலும் ஈரமான மற்றும் அழுக்கான இடங்களில் காணப்படுவதால், அது ராகு மற்றும் கேதுவுடன் தொடர்பு படுத்தப்படுகிறது.

கேது மன உளைச்சல் மற்றும் திடீர் பிரச்னைகள் ஆகியவற்றிற்கு காரணமாக இருக்கிறது. இதனால்தான் வீட்டில் அதிக அளவில் கரப்பான் பூச்சி தோன்றினால் , அங்கு ராகு கேதுவின் ஆதிக்கம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வீட்டின் நல்ல அதிர்வுகள் குறைந்துபோய் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க தொடங்குகிறது.

கரப்பான் பூச்சிகள் ஒரு இடத்தில் அதிக காலம் வசித்தால் அங்கு பல பிரச்னைகள் வரக்கூடும். வீட்டின் அமைதியான சூழ்நிலையை முற்றிலும் பாதிக்கும், சிறு சிறு விஷயங்களுக்கு கூட அந்த வீட்டில் சண்டைகளும் மனஸ்தாபங்களும் ஏற்படலாம். குடும்பத்தினர் அடிக்கடி மன உளைச்சல்களுக்கு ஆளாவதோடு மட்டுமின்றி, வீட்டில் நிதி நெருக்கடியும் அதிகரிக்கக்கூடும்.

கடின உழைப்பு இருந்தாலும் எந்த செயலிலும் வெற்றி கிடைக்காது , இதனால் உழைப்பு வீணாகும். இது போன்ற செயல்கள் அனைத்தும் ராகு மற்றும் கேதுவின் பார்வையினால் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆடிமாதம் அம்மன் அற்புதம்: 'பந்தாடும் நாயகி' வீற்றிருக்கும் கோவில் அமைவிடம்...
cakhroach and spirituality

கரப்பான் பூச்சிகளைப் பற்றி வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகிறது?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டின் தென்மேற்கு மற்றும் சமையலறைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள் வசிப்பது அசுபமாகக் கருதப்படுகிறது. இது வீட்டில் நேர்மறை ஆற்றல் சேருவதை தடை செய்கிறது, மேலும் எதிர்மறை சக்திகளை அதிகரிக்க செய்கிறது. அடிக்கடி சமையலறையில் கருப்பன் பூச்சி காணப்படுவது, மங்களகரமான தெய்வமான அன்னபூரணியின் ஆசி இல்லை, அங்கு மஹாலஷ்மி தங்க விரும்பவில்லை என்பதை குறிக்கிறது

ராகு கேதுவின் தீவிரத்தை குறைக்க:

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் , குறிப்பாக சமையல் அறை சுத்தத்தில் மிகவும் கவனமாக இருங்கள். கரப்பான் பூச்சிகள் போன்றவை தென்பட்டால், அவற்றை அழிக்கும் புழக்கத்தில் உள்ள வழக்கமான நடைமுறையை பின்பற்றுங்கள்.

கரப்பான் பூச்சி ஒழிந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்கும். நல்ல சக்திகளை தினமும் ஈர்க்க கிராம்பு, கற்பூரம் ஆகியவற்றை எரித்து நல்ல சக்திகளை வரவேற்கலாம். இது ராகு கேதுவின் தாக்கங்களை குறைத்து , மகாலட்சுமியின் வரவினை ஏற்படுத்துகிறது.

logo
Kalki Online
kalkionline.com