
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கடவுளை வழிபடுகின்றனர். ஆனால், கற்பூர ஆரத்தி காண்பிக்காமல் பூஜை நிறைவடைவது கிடையாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கற்பூர ஆரத்தி காண்பிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்கிறது: கற்பூர ஆரத்தி சுற்றுச்சூழலில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை ஆற்றல்களையும் அசுத்தங்களையும் அகற்றி, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவவும், சாதகமான காற்றை வீசச் செய்து பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை படிப்படியாக சீராக்குகிறது.
2. காலசர்ப்ப தோஷம் / பித்ரு தோஷம் நீங்க: நட்சத்திரங்களின் சில நிலைகள் அல்லது தவறான நிலைகளில் குவிந்த கிரகங்கள் காரணமாக, கால சர்ப்ப தோஷம் மற்றும் பித்ரு தோஷத்தை நீக்கி, உடல் நலம் மற்றும் நிதி பிரச்னைகளை சீராக்கி, தோஷங்கள் நீங்கி நல்வாழ்க்கையை கற்பூர ஆரத்தி கொடுப்பதாக ஐதீகம்.
3. இறைவனின் அருள் கிடைக்க: சூரிய அஸ்தமனத்தில் கற்பூர ஆரத்தியை ஏற்றி தெய்வங்களை மகிழ்விப்பது, வீட்டில் அமைதி மற்றும் இறைவனின் பூரண அருள் கிடைப்பதற்கு வழிவகுக்கிறது.
4. ஆபத்தை குறைக்கிறது: தினமும் கற்பூரம் ஏற்றி வருபவர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் இறப்பு குறைவதோடு, விபத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது.
5. கெட்ட கனவுகளில் இருந்து விடுபட: கற்பூரமானது சுற்றுச்சூழலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அகற்றி, அமைதியான சூழலை உருவாக்கி, கனவுகளை விலக்கி வைக்கும். படிப்படியாக சில மனநலப் பிரச்னைகளையும் சரி செய்கிறது.
6. பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்: தினமும் கற்பூரம் ஏற்றி வைப்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் பெறலாம் என்பது ஐதீகம். ஒரு ரோஜாவை எடுத்து அதில் ஒரு சிறிய கற்பூரத்தை ஏற்றவும். பின்னர் அந்த ரோஜாவை துர்கா தேவியின் பாதத்தில் வைத்து வணங்குங்கள். இந்த முறையை தொடர்ந்து 43 நாட்கள் கடைபிடிப்பது நிதி முன்னேற்றத்திற்கு உதவும். நிதி பரிகாரங்கள் துர்கா தேவியுடன் தொடர்புடையது என்பதால், நவராத்திரியின்போதும் இதைச் செய்யலாம்.
7. கற்பூரம் உறவுகளை பலப்படுத்துகிறது: அறையின் மூலைகளில் இரண்டு கற்பூர உருண்டைகளை வைப்பது தம்பதியினருக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே, வீண் வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் அடிக்கடி நிகழாமல் குடும்பத்தில் அமைதி உண்டாவதோடு, கோபமும் குறையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கற்பூர ஆரத்தி காண்பிப்பதால் நாம் இறைவனோடு ஒன்றி மன அமைதி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவோம் என்பதைதான் மேற்கண்ட விஷயங்கள் விளக்குகின்றன.