பெண்களின் சபரிமலை: சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் மகிமைகள்!

Chakkulathukavu Temple - பகவதி அம்மன்
Chakkulathukavu Temple - பகவதி அம்மன்AI Image
Updated on

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உருவான ஆன்மீகப் பின்னணி:

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் கேரள மாநிலம் ஆலப்புழை மற்றும் பந்தனம் திட்டா மாவட்டங்களின் எல்லையில் பம்பை மற்றும் மணிமலை ஆறுகளுக்கு நடுவே நீரேற்று புரம் பகுதியில் அமைந்துள்ளது. நாரத முனிவரால் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இக்கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப் படுகிறது. பெண்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து அம்மனை வழிபடுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூலவரான அம்மன் 8 கரங்களுடன் கொண்ட துர்க்கை அம்மன் வீற்றிருக்கும் கருவறைக்கும் மேற்கூரை கிடையாது. திருக்கார்த்திகை அன்று நடைபெறும் பொங்கல் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது

இதன் அருகில் திருவல்லா ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் கோவில் உள்ளது. கோட்டையம் சங்கனாச்சேரி ஆலப்புழை செங்கனூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். இந்த கோவில் துர்க்கைக்காக அமைக்கப்பட்ட கோவிலாகும்.

தென்னிந்தியாவிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள். ஆரம்ப காலத்தில் உள்ளூர்வாசிகள் வழிபடும் குடும்ப கோவிலாக இருந்து வந்தது. தற்போது புகழ்பெற்ற யாத்திரிகர் ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சிவன் விநாயகர் முருகன் மகாவிஷ்ணு ஐயப்பன் யட்சி ஆகிய தெய்வங்களும் உள்ளனர்.

பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலை சுற்றி வருவார்கள். கோவிலின் இருபுறமும் பெண்கள் பொங்கல் வழிபாடு செய்வார்கள். இந்தப் பொங்கல் வழிபாடு வரிசை சுமார் 20 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் நீளம் வரை காணப்படும்.

இதையும் படியுங்கள்:
மதுரையில் ஆன்மீகக் கொண்டாட்டம்: மீனாட்சி அம்மன்- கள்ளழகர் கோவில்களில் வசந்த உற்சவம் தொடக்கம்!
Chakkulathukavu Temple - பகவதி அம்மன்

பக்தர்கள் அரிசி தேங்காய் வெல்லம் பானை ஆகியவற்றை பெண்கள் கொண்டு வருவார்கள்.

தலைமை பூசாரி கருவறைக்குள் சென்று தீபத்திலிருந்து நெருப்பை எடுத்து பிரதான அடுப்பை பற்ற வைக்கிறார். இந்த அடுப்பில் இருந்து நெருப்பு ஒவ்வொரு பொங்கல் பானைக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது. இங்கு கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா 12 நோயம்பு திருவிழா எனப்படும் இது ஒரு உண்ணா நோன்பு எனப்படுகிறது. தனு மாதம் முதல் நாள் முதல் 12 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.

நாரி பூஜை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி வெள்ளிக் கிழமை அன்று நடைபெறும். தலைமை பூசாரி ஒவ்வொரு பெண்ணையும் பீடத்தில் அமர வைத்து அவர்களை தேவியாக பாவித்து பாத பூஜை செய்கிறார். இங்குள்ள அம்மனை வழிபட்டால் பிரச்னைகள் தீரும் நாம் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறுகிறது என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது.

பகவதி அம்மன் ஆலயத்தின் உலகப் புகழ்பெற்ற 50 கி.மீ பொங்கல் திருவிழா:

இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா உலக அளவில் பேசப்படுகிறது. கார்த்திகை மாதம் சொக்கப்பனை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் 12 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

Chakkulathukavu Temple - பகவதி அம்மன்
Chakkulathukavu Temple - பகவதி அம்மன்AI Image

அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்கள் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதுபோன்ற அபிஷேகம் வேறு எங்கும் நடைபெறுவதாக தெரியவில்லை.

இந்த அபிஷேக தீர்த்தத்தை வாங்கி குடித்தால் சகல நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இங்குள்ள நம்பூதிரி சொல்லும் வெற்றிலை பிரசன்னம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பிரசன்னம் மிகவும் துல்லியமாக இருக்கும். இதனைக் கேட்பதற்காக அனைத்து இடங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

சோட்டானிக்கரை பகவதி அம்மனை போன்று இந்த அம்மனும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. சமூகத்தில் தலை சிறந்து விளங்கும் பெண்களை தேர்ந்தெடுத்து ஒரு பீடத்தில் அமரவைத்து அவர்களை தலைமை பூசாரி பாத பூஜை செய்து வழிபடுகிறார். பெண் பக்தர்களின் கால்களை புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துகிறார். இந்த பூஜை ஆனது துர்கா தேவிக்கு சமர்ப்பணம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இத்தகைய பிரசித்தி பெற்று விளங்கும் இந்த சக்குளத்துக்காவு பகவதி அம்மனை நாமும் வழிபாடு செய்வோம்.

இந்த ஆலயத்தின் வழிபாட்டு முறைகளையும் விரதப் பலன்களையும் அறிந்துகொள்வதன் மூலம், உங்களின் தீராத வினைகளும் நோய்களும் தீர அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற தெளிவைப் பெறுவதோடு, நினைத்த காரியத்தை உடனே நிறைவேற்றிக் கொள்ளும் ஆன்மீக வழிகாட்டுதலையும் அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com