
ஒவ்வொரு ராசிக்கும் சந்திராஷ்டமம் மாதம் ஒரு முறைதான் வருகிறது. ஒவ்வொரு ராசியின் ஜாதகத்திலும் சந்திரன் எட்டாம் வீட்டில் இருக்கும் காலம், சந்திராஷ்டம காலம் என அழைக்கப்படுகிறது. சந்திரன் ஒரு ராசியின் எட்டாமிடத்தில் இருக்கும் காலம் ஏறக்குறைய இரண்டரை நாட்கள் இருக்கும்.
சந்திராஷ்டம காலத்தில் வழக்கமான வேலைகளைச் செய்யலாம், ஆனால் பெரிய, முக்கிய காரியங்களை தவிர்ப்பது நல்லது. இந்த நாட்களில் திருமணம், சாந்தி முகூர்த்தம் போன்ற முக்கிய காரியங்களைச் செய்யக்கூடாது என்றும் நீண்ட தூர பயணங்கள் செல்வது, சிலருக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் ஜூன் மாதம் 1-ம்தேதியில் இருந்து ஜூன் மாதம் 30-ம்தேதி வரை 12 ராசிக்காரர்களுக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம் வருகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
ஜூன் மாதம் 12 ராசிகளுக்கான சந்திராஷ்மம் நாட்கள் :
மேஷம் - ஜூன் 9-ம்தேதி காலை 8.50 முதல் ஜூன் 11-ம்தேதி இரவு 8.10 மணி வரை
ரிஷபம் - ஜூன் 11-ம்தேதி இரவு 8.10 மணி முதல் ஜூன் 14-ம்தேதி காலை 5.38 மணி வரை
மிதுனம் - ஜூன் 14-ம்தேதி காலை 5.38 மணி முதல் ஜூன் 16-ம்தேதி மதியம் 1.10 மணி வரை
கடகம் - ஜூன் 16-ம்தேதி மதியம் 1.10 மணி முதல் ஜூன் 18-ம்தேதி மாலை 6.35 மணி வரை
சிம்மம் - ஜூன் 18-ம்தேதி மாலை 6.35 மணி முதல் ஜூன் 20-ம்தேதி 9.45 மணி வரை
கன்னி - ஜூன் 20-ம்தேதி இரவு 9.45 மணி முதல் ஜூன் 22-ம்தேதி இரவு 11.03 மணிவரை
துலாம் - ஜூன் 22-ம்தேதி இரவு 11.03 மணி முதல் ஜூன் 24-ம்தேதி இரவு 11.45 மணி வரை
விருச்சிகம் - ஜூன் 24-ம்தேதி இரவு 11.45 மணி முதல் ஜூன் 27-ம்தேதி அதிகாலை 1.40 வரை
தனுசு - ஜூன் 27-ம்தேதி அதிகாலை 1.40 மணி முதல் ஜூன் 29-ம்தேதி காலை 6.34 மணி வரை
மகரம் - ஜூன் 1-ம்தேதி காலை 6.34 மணி முதல் ஜூன் 4-ம்தேதி மதியம் 7.35 மணி வரை
கும்பம் - ஜூன் 4-ம்தேதி காலை 7.35 மணி முதல் ஜூன் 6-ம்தேதி இரவு 8.06 மணி வரை
மீனம் - ஜூன் 6-ம்தேதி இரவு 8.06 மணி முதல் 9-ம்தேதி காலை 8.50 மணி வரை