mantras
mantras

இந்த 108ல அப்படி என்னதான் இருக்கு?

Published on

மந்திரங்களை ஏன் சரியா 108 முறை சொல்றாங்க அல்லது எழுதுறாங்க? கடவுளுக்கு ஏன் 108 தேங்காய் உடைக்கிறோம்? கோவிலை ஏன் 108 முறை சுற்றி வருகிறோம்? இந்த 108 என்ற எண்ணிற்கு பின்னாடி ஒரு பெரிய விஷயம் இருக்கு! வாங்க தெரிஞ்சுக்கலாம்!

மந்திரங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. மந்திரங்களை 108 முறை ஜபிக்கக் காரணம் என்ன?

எண் கணிதத்தில் 108 என்ற எண்ணுக்கு 1+0+8=9 என்று கணக்கிடப்படுகிறது. 9 மிகவும் அதிர்ஷ்டமான, சக்திவாய்ந்த மங்களகரமான எண்ணாக கருதப்படுகிறது. 9 மற்றும் 12 இரண்டாலும் வகுபடுகிறது.

108 ஆற்றல்களின் ஒற்றுமையைப் குறிக்கிறது. 1 உச்சநிலையை குறிக்கிறது. 0 என்பது வெறுமை அல்லது ஒன்றுமில்லாததைக் குறிக்கிறது மற்றும் 8 நேர்மையை குறிக்கிறது. அனைத்தின் கூட்டுத்தொகை 9. இவ்வாறு ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால், தனிமனிதனை வெறுமை மற்றும் நேர்மையின் தாளத்துடன் சீரமைக்கும் என்று நம்பப்படுகிறது.

யோக மரபில் மனித உடல் பிரபஞ்சத்தின் சிறிய பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இந்த உடல் நிலைத்திருக்க பலவிதமான ஆற்றல் மையங்கள் அல்லது சக்கரங்கள் உள்ளன.

108 ஆற்றல் கோடுகள் ஒன்றிணைந்து இதய சக்கரத்தை உருவாக்குகின்றன என்று நம்பப்படுகிறது. எனவே ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது இந்த ஆற்றல் மையங்களை செயல்படுத்துவதாகவும், சக்கரங்களை சுத்தப்படுத்துவதாகவும், உடல் முழுதும் பிராண சக்தி சீராகப் செல்வதாகவும் கருதப்படுகிறது. இது மனதையும், உடலையும் அமைதிப்படுத்தும்.

108 ஏன்?

இந்து மதத்தில் 108 உபநிடதங்கள் உள்ளன. கடவுளுக்கு 108 பெயர்கள் உள்ளன. சிவபெருமானுக்கு 108 பெயர்கள் உள்ளன. கிருஷ்ணருக்கும் அப்படியே. அறிவியல் ரீதியாகவும் சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைவிட 108 முதல் 109 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

நீங்கள் திரும்பத் திரும்ப மந்திரத்தைச் சொல்லும் போது நினைவாற்றல் மேம்படுகிறது. இதனால் மனதில் குழப்பங்கள் விலகி அமைதி ஏற்படுகின்றது.

சம்ஸ்கிருத எழுத்துக்களில் 54 எழுத்துக்கள் உள்ளன. அதில் ஆண்பால் பெண்பால் உள்ளது. 54லை இரண்டால் பெருக்க 108 வரும்.

மேலும் மனிதனின் ஆத்மா 108 நிலைகளைக் கடந்து செல்கிறது. எனவே மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நன்மை பயக்கும்.

இதையும் படியுங்கள்:
'கடவுள் இருக்கிறார்' - கணித ஆதாரத்துடன் நிரூபித்த விஞ்ஞானி!
mantras
logo
Kalki Online
kalkionline.com