

தமிழ் மாதம் மொத்தம் 12 உள்ளது. அதில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புக்குரியதாக இருக்கிறது. இந்த சித்திரை மாதத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா? செய்யக்கூடாதா என்று சந்தேகம் இருக்கும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
இந்த மாதத்தில் எல்லாவிதமான சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தலாம்.
இந்த மாதத்தில் ஒரு மரமாவது நடலாம். இதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்கும் மரம் நடுவதன் மூலம் அனைவருக்கும் நிழல் தரக்கூடியதாக உள்ளது. பறவைகளுக்கு தங்கும் இடமாகவும் இருக்கும். நிழலினால் மனிதர்களுக்கு திருப்தியும், பறவைகளின் மகிழ்ச்சிக்கும் உதவுவதால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்.
அக்னி நட்சத்திர காலங்களில் நீர் பந்தல், மோர்பந்தல், தயிர்சாதம் போன்ற அன்னதானம் செய்வதால் புண்ணியம் இதன்மூலம் கிடைக்கும். இந்த மாதத்தில் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற ஏழைகளுக்கு தானம் செய்வது அவசியம்.
செய்யக்கூடாதது
சித்திரை மாதத்தில் புது வீடு கட்டி பால் காய்ச்சக்கூடாது. அதுபோல புது வீட்டிற்கு நிலை வைப்பது, கான்கிரீட் போடுவது, கூரை போடுவது போன்ற எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது.
மேலும் செடி, கொடி, மரம் போன்றவற்றை வெட்டக்கூடாது. கிணறு, குளம் போன்றவற்றை அமைக்கக்கூடாது. நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு வேலைகளை செய்யக்கூடாது.
பூமி பூஜை செய்வது கூடாது விவசாய வேலைகள் தொடங்குவது தவிர்க்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
சித்திரை சிறப்புகள்
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள்தான் சித்திரை முதல் நாள் ஆகும்.
சித்திரை முதல் நாள் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ரா தேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.
சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று விரதம் இருந்து லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும். சித்திரை மாத விரதம் இருந்து சிவ பார்வதியை வணங்கி, தானங்களும் செய்தால் சிறப்பாக வாழ்ந்து முடிந்து சிவலோகம் அடையலாம்.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில் நேரில் பார்த்த தரிசித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும்.
சித்திரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் கண்டால் அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி தீரும்.
சித்திரைத் திருவிழா மதுரை, திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர் வேதாரண்யம், திருவையாறு, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
சித்திரை மாத அமாவாசை அடுத்த சுக்லபட்ச திரிதியை அட்சயதிரிதியை என போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தை தரும்.
சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணம் சொல்கிறது.
சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாக கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது.
சித்திரை மாதத்தில் வரும் நாட்கள் பல்வேறு சிறப்பு களையும் கொண்டதால், கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.