அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க உகந்த நேரம் எது? அதிர்ஷ்டம் தரும் வழிபாட்டு முறைகள்!

akshaya-tritiya-2026
akshaya-tritiya-2026
Updated on

ந்த ஆண்டு அட்சய திருதிய ஏப்ரல் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மேஷ ராசியில் சூரியனும், ரிஷப ராசியில் சந்திரனும் இரு சிறந்த நிலைக்கு நகர்ந்து அட்சய யோகத்தை உருவாக்குகின்றன. இந்த நாளில் தங்கம் வாங்க சரியான நேரம் எது என்பதை பார்த்தால் அட்சயதிருதியை ஏப்ரல் பத்தாம் தேதி காலை 10.49 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 7.27 மணி வரை நீடிக்கிறது.

இந்த மங்களகரமான நாளில் தங்கம் வாங்க விரும்புவோர் ஏப்ரல் பத்தாந்தேதி காலை 10.49 மணி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி அதிகாலை 5.51 மணிக்குள் தங்கம் வாங்குவது உகந்த நேரம் ஆகும். இந்த நாளில் தானம் வழங்கவேண்டும்.

அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் இந்த நாளில் தங்கம் வெள்ளிதான் வாங்க வேண்டும் என்பது இல்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்சமும் கிடைக்கும். அட்சய திருதியை அன்று தானியங்கள் உப்பு மஞ்சள் விளக்கு வெண்கல மணி லட்சுமி படம் பணம் குங்குமச்சிமிழ் சந்தனம் சர்க்கரை என எது வேண்டுமானாலும் வாங்கலாம்.

தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிக்கும். இவர்களின் அருள் நீடித்தால் வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பது காலம் காலமாக கடைபிடித்து வரும் நம்பிக்கை ஆகும். தங்கம் வாங்குகிறோமோ இல்லையோ அந்த நேரத்தில் அந்த நல்ல நேரங்களில் உப்பு அல்லது மஞ்சள் வாங்கினால் போதும் தங்கம் வாங்கின யோகமும் மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

இந்த நாளில் தயிர் சாதம் தானம் செய்தால் மகாலட்சுமி மனம் குளிர்வாள் இந்த நாளில் எதை செய்தாலும் அதன் பலன் ஆயிரம் மடங்காக நமக்கு வரும். உணவு, உடை, கல்விக்கு உதவி முதியவருக்கு பண உதவி என எந்த தர்மம் செய்தாலும் குடும்பத்தில் இருபத்தியோரு தலைமுறைக்கும் புண்ணியம் தொடரும். இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

திருப்பதி ஏழுமலையான் திருமணத்திற்கு கடன் கொடுத்தவர் குபேரன் சிவந்தமேனி குள்ள வடிவம் பெரிய வயிறு சிரித்த முகம் என காட்ச தரும் இவர் தவத்தில் ஈடுபட்டு சிவனருள் பெற்றார்.

இவரது கிரீடத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் பால் தேன் தயிர் நெய் கற்கண்டு மாவில் செய்த இனிப்பு வகைப்படைத்து ரோஜா மலரால் அர்ச்சனை செய்ய இவரது அருள் முழுமையாக கிடைக்கும். பசுஞ் சாணத்தால் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு நிலையில் மாவிலை தோரணம் கட்டும் வீட்டில் செல்வம் வளம் பெருகும்.

இதையும் படியுங்கள்:
சித்திரை மாதத்தில் வரும் தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கிய திருவிழாக்கள்..!
akshaya-tritiya-2026

வளையல் கண்ணாடி சீப்பு மஞ்சள் குங்குமம் புடவை ஆகியவற்றை சுமங்கலிகளுக்கு தானம் செய்யும் வீட்டில் லஷ்மி குடியிருப்பாள். அஷ்ய திருதியை நாளில் மகாலட்சுமியை நாமும் தங்கம் வாங்கியோ உப்பு சர்க்கரை மஞ்சள் அதுபோல் எது வாங்கினாலும் நம்மிடம் தங்கும் அவளை வரவேற்று மகாலட்சுமியை நம்முடன் நிரந்தரமாக தங்கச் செய்வோம்.

திருதியை நமக்கு அட்சயமாக பொன்னையும் பொருளையும் தான தர்ம பலன்களையும் வாரி வழங்கும் நன்னாளாகும்.

தங்கத்தை தங்க வைக்க சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய கோவிலாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது. நமது சுய ஜாதகத்தின் தசா புக்தி கேற்ப தெய்வத்தை தேர்ந்தெடுத்து வழிபடும்போது நட்சத்திர அடிப்படையில் தாரா பலம் பெற்ற நாளில் காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் பெரியநாயகி அம்மன் வைரவன்பட்டி வளரொளி நாதர் வடிவுடையம்மன் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வழிபட்டு வந்தால் என்றென்றும் இல்லத்தில் தங்கும் தங்கி இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com