

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதம் புதிய தமிழ் வருடத்தின் பிறப்பாக கருதப்படுகிறது. சித்திரை மாதத்தில் பல முக்கியமான சிறப்பு நாட்கள் உள்ளன. இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் பூஜைகள் ஆகிய செல்வ வளத்தை பெருக செய்யும்.
கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத கடைசி நாள் தங்கம் வெள்ளி பொருட்கள் பழவகைகள், காய்கனிகள், புத்தாடை முகம் பார்க்கும் கண்ணாடி / தேங்காய், என பூஜை அறையில் அலங்கரித்து மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களை முதலில் பார்ப்பார்கள். இதனால் இந்த நாள் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்று நம்பிக்கை.
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள்தான் சித்திரை முதல் நாளாகும். சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணங்கள் சொல்கிறது. சித்திரை மாதம் சுக்ல பட்ச வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
சித்ராபௌர்ணமி அன்று விரதம் இருந்து நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்.
சித்திரை முதல் நாளன்று கேரளாவில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் வழங்குவார்கள் . இதற்கு 'கைநீட்டம்' என்று பெயர்.
சித்திரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தைநேரில் பார்த்து தரிசித்தால் களத்திர தோஷ, பாவம் தோஷங்களும் விலகும்.
அன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடப்பது மிகவும் சிறப்பானது. மக்கள் அதை பார்க்க வருவார்கள்
பூம்புகாரில் இந்திர விழா சித்ரா பெளர்ணமியில் நடந்ததாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் கொடுத்தால் ஜென்மாந்தர பாவங்கள், பானங்கள் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகிறது.
சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்லபட்ச திரிதியை அட்சய திரதியை என் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்தால் பெரும் புண்ணியத்தை அடையலாம் என்பது ஐதீகம்.
சித்திரை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்டலோகத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணங்கள் சொல்கிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும். புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் அகலும்.
சித்திரை மாத பௌர்ணமி நாளில்தான் எமனின் கணக்கரான சித்திரகுப்தன் தோன்றிய நாளாகும்.
சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.