ஐயப்ப பக்தர்களைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி பற்றித் தெரியுமா?

Lord ayyappan and karuppaswamy story
Lord ayyappan and karuppaswamy storyImage Credits: Maalaimalar
Published on

ருடா வருடம் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கல்லையும், முள்ளையும் காலுக்கு மெத்தையாக மிதித்துக் கடந்து சுவாமி ஐயப்பனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். இப்படி அவர்கள் கடினமான காட்டுப்பகுதியை கடந்து வரும்போது ஐயப்பன் அவர்களுக்குக் காவலாக இருப்பார். ஆனால், அந்த ஐயப்பனின் பக்தர்கள் வீட்டை காவல் காப்பது யார் தெரியுமா? அதைப்பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் ஒரு தேங்காய் உடைத்துவிட்டுதான் கிளம்புவார்கள். அதேபோல, சபரிமலையில் இருந்து வீடு திரும்பியதும் வீட்டில் தேங்காய்  உடைத்த பின்னரே வீட்டிற்குள் நுழைவார்கள்.

இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? ஐயப்பன் கருப்பண்ண சுவாமியிடம், ‘மாலைப்போட்டு, விரதமிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களை நான் பார்த்துக்கொள்வேன். அவர்களுடைய குடும்பத்தாரை பார்த்துக்கொள்வது உனது பொறுப்பு’ என்று ஐயப்பன் கருப்பண்ணசாமிக்கு கட்டளையிடுகிறார்.

‘இதை நான் எப்படி தெரிந்துக்கொள்வது’ என்று கருப்பண்ணசாமி கேட்க, அதற்கு ஐயப்ப சுவாமி, ‘சபரிமலைக்கு வீட்டில் இருந்து செல்வதற்கு முன்பு ஒரு தேங்காய் உடைப்பார்கள். அந்த தேங்காய் சத்தத்தை கேட்டதுமே அவர்கள் வீட்டிலே போய் நீ காவலாக இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

அதையடுத்து, ‘எவ்வளவு நாள் நான் காவலாக இருக்க வேண்டும்?’ என்று கருப்பண்ணசாமி கேட்கிறார். ‘சபரிமலையில் இருந்து அவர்கள் திரும்பி வந்ததும் இன்னொரு தேங்காய் உடைப்பார்கள். அந்தத் தேங்காய் சத்தத்தை கேட்டதும் நீ கிளம்பலாம்’ என்று ஐயப்பன் கூறுகிறார்.

சபரிமலைக்குச் சென்றுவிட்டு திரும்பிவரும் வரை அந்த பக்தர்களின் வீட்டில் காவலாக கருப்பண்ணசாமி இருக்கிறார். அதனால்தான் சபரிமலைக்கு போகும்போதும், சபரிமலையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்ததும் தேங்காய்கள் உடைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை ரகசியம் தெரியுமா?
Lord ayyappan and karuppaswamy story

ஐயப்பன் வழிபாட்டில் தேங்காய் இன்றியமையாததாகும். இருமுடியில் நெய்தேங்காய் கட்டி எடுத்துச் சென்று தேங்காயை உடைத்து நெய்யை மட்டும் எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்குக் கொடுப்பார்கள். இதில் தேங்காய் என்பது உடல், நெய் என்பது நம்முடைய ஆன்மா என்று பொருள். அத்தகைய நெய்யை வைத்து ஐயப்பனை அபிஷேகம் செய்யும்போது நம்முடைய ஆன்மாவும் பரிசுத்தமாக அவனை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

தேங்காயில் எப்படி நார்கள் இருக்கிறதோ, அதேபோலதான் மனிதனின் இதயத்திலும் தசைநார்கள் உள்ளன. தேங்காயின் உள்ளே இருக்கும் நீரைப் போல மனிதனின் உள்ளேயுமே கலங்கலான எண்ணங்கள் அமைந்துள்ளள. இதை குறிப்பதற்காகத்தான் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com