ஐவகை நந்திகள் பற்றி தெரியுமா?

Nanthi Bhagavan
நந்தி பகவான்
Published on

சிவன் கோயில்களில் மூலவர் பெருமானுக்கு எதிரில் வீற்றிருப்பவர் நந்தியெம்பெருமான். கோயில்களில் அமைக்கப்பெறும் நந்திகளில் ஐவகை நந்திகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு நந்தியும் அமைந்திருக்கும் அமைவிடம் குறித்தும் அந்தந்த நந்திகளின் வரலாறு குறித்தும் ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. நந்தியை வழிபாடு செய்து விட்டு அதற்குப் பிறகு சிவபெருமானை வழிபாடு செய்தால்தான் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. இனி, ஐவகை நந்திகள் குறித்துக் காண்போம்.

அவதார நந்தி: அவதார நந்தி என்பது சிவன் கோயில்களில் காணப்படுகின்ற ஐவகை நந்திகளில், லிங்கத்திற்கு அருகே இருப்பதாகும். கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு திருமாலே வாகனமாக மாறி நந்தியாக உருவெடுத்தார். இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றனர்.

கைலாச நந்தி: சிவன் கோயில்களில் காணப்படும் ஐவகை நந்திகளில் இதுவும் ஒன்று. அனைத்து சிவன் கோயில்களிலும் மூலவருக்கு அருகே இந்த நந்தி அமைந்திருக்கும் கைலாசத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இந்த நந்தி இருப்பதால்தான் இதற்கு கைலாச நந்தி என்று பெயர்.

சாதாரண நந்தி: சிவன் கோயில்களில் காணப்படும் ஐந்து வகை நந்திகளில் இது நான்காவதாகும். ஐந்து நந்திகளுக்கும் குறைவான சிவன் கோயில்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

இதையும் படியுங்கள்:
எப்போதும் ஏசியிலேயே இருப்பவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!
Nanthi Bhagavan

அதிகார நந்தி: மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த அதிகார நந்தி, சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயத்தின் வாசலில் காவலராக நிற்கும் நந்தியாகும். சிவபெருமானை தரிசனம் செய்ய வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் இந்த நந்திக்குக் கொடுத்திருப்பதால் இது அதிகார நந்தி என அழைக்கப்படுகிறது.

பெரிய நந்தி: தஞ்சை பெருவுடையார் கோயிலில் வீற்றிருக்கும் நந்திதான் பெரிய நந்தியாகும். இது சிவன் கோயில்களின் நுழைவாயிலில் காணப்படும் நந்தியாகும். கைலாயத்தில் எந்நேரமும் காவலனாக போர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இது விஸ்வரூப நந்தி மற்றும் மகா நந்தி எனவும் அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com