ராவணனை சிறைபிடித்த மன்னன் பற்றித் தெரியுமா?

Do you know about the king who imprisoned Ravana?
Do you know about the king who imprisoned Ravana?https://vedicfeed.com
Published on

சுரன் ராவணன் மாபெரும் வீரனாகவும், சிவபெருமானின் தீவிர பக்தனாகவும், அனைத்து தேவர்களையும், நவக்கிரகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவனாக நமக்கு இராமாயணக் கதை மூலம் அறிய முடிகிறது. ஆனால், மாவீரனான ராவணனையும் சிறைபிடித்த ஒரு மன்னன் உள்ளான். அவனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மகாவிஷ்ணுவின் ஆயுதமான சுதர்சன சக்கரம் ஒரு சமயம் தன்னைப் பற்றி மிகவும் தலைக்கணம் கொண்டது. எனவே, மகாவிஷ்ணு, சுதர்சன சக்கரத்தை கார்த்தவீர்யார்ஜுனன் என்ற மனிதனாகப் பிறக்கும்படி சபித்தார். அப்போது, மகிஷ்மதி நகரத்தின் மன்னன் கிருதவீரியன் மற்றும் பத்மினி தம்பதியருக்கு, தத்தாத்ரேயரின் அருளால் பிறந்தான் கார்த்தவீர்யார்ஜுனன்.

மகாவிஷ்ணுவை தவிர, பிறரால் அழியா வரம் பெற்றவன் இவன். மனித உருவில் கார்த்தவீர்யார்ஜுனன், மகிஷ்மதியின் அரசன் ஆனான். பின்னர் தனது குலகுருவான கர்க்க முனிவரின் அறிவுரைப்படி தத்தாத்ரேயரிடம் சென்று ஆயிரம் ஆண்டுகள் பணிவிடைகள் செய்தான். கார்த்தவீரியனின் பணிவிடைகளைக் கண்டு மகிழ்ந்த தத்தாத்ரேயர், கார்த்தவீரியனுக்கு அனைத்து உலகங்களையும் ஆட்சி செய்யும் வரம் அளித்தார். மேலும், ஆயிரம் கரங்களைக் கொண்ட குறிப்பிடத்தக்க வரத்தையும் அவன் பெற்றான்.

ஒரு நாள் அவன் தனது மனைவியருடன் நர்மதை நதியில் குளித்துக் கொண்டிருந்தபோது அவன் மிகவும் அசாதாரணமான ஒரு செயலைச் செய்தான். அவன் தனது ஆயிரம் கரங்களைப் பயன்படுத்தி இருபுறமும் ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தினான். அது அவனுடைய வல்லமையின் வெளிப்பாடாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
வருமானத்தை உயர்த்தும் ஏழு விஷயங்கள் தெரியுமா?
Do you know about the king who imprisoned Ravana?

ஒரு நாள் ராவணன் சிவபெருமானை துதித்து பாடல்களைப் பாடிக்கொண்டு இருந்தான். அவனது பிரார்த்தனைகள் கார்த்தவீரியனுக்கு தொந்தரவு செய்தன. அவன் மிகவும் கோபம் கொண்டு, ராவணனிடம் சண்டையிட்டு அவனை சிறைபிடித்தான். பின்னர் அவனது தாத்தா புலஸ்தியர் வேண்டுகோளின்படி ராவணனை விடுவித்தான்.

பின்னர் ஒருசமயம் கார்த்தவீரியன் இலங்கை மீது படையெடுத்து ராவணனை சிறை பிடித்தான். கார்த்தவீரியனின் அறநெறி கடந்த செயலைக் அறிந்த மகாவிஷ்ணுவின் அவதாரமும், ஜமதக்னி முனிவரின் மகனுமான பரசுராமர், தனது ஆயுதமான கோடரியைப் படைக்கலமாகக் கொண்டு கார்த்தவீரியனை வதம் செய்தார். அதுமட்டுமின்றி, கார்த்தவீரியனிடம் இருந்து ராவணனும் விடுவிக்கப்பட்டான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com