நமது முன்னோர்கள் காலத்திலிருந்து மீன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனின் கொடியில் மீனையே சின்னமாக வைத்திருந்தார். அந்த அளவிற்கு மீனிலிருந்து சக்தியும், நன்மையும் கிடைக்கும் என்று மக்கள் நம்பினர். மீன்களை வீட்டில் வளர்ப்பதால், பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் செல்வத்தை கொடுக்கும் என்பது மக்களின் பொதுவான எண்ணமாக உள்ளது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தங்க மீன்களை வீட்டில் வளர்ப்பதால், வீட்டிற்கு மிகபெரிய யோகத்தையும், செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும். பச்சை நிற மீன்களை வளர்ப்பதால், வீட்டிலும், தொழிலிலும் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும். வீட்டில் குழந்தைகள் பிறக்கும், பிறந்த குழந்தைகள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைவார்கள், வேலையில் சம்பள உயர்வு ஏற்படும், அதிர்ஷ்டம் கிடைக்கும்.
சிவப்பு நிற மீன்கள் வளர்த்தால், வளமை ஏற்படும். வீட்டில் செல்வம், செல்வாக்கு அனைத்தும் அதிகரிக்கும். மஞ்சள் நிற மீன் வளர்த்தால், செயல்திறன் அதிகரிக்கும், எந்த வேலையை எடுத்தாலும் சுறுசுறுப்பாக ஆக்டிவ்வாக செய்வீர்கள். ஞானம், புத்தி கிடைக்கும். வீட்டில் நேர்மறையான சக்தி அதிகரிக்கும்.
கருப்பு நிற மீன்களை வளர்த்தால், உங்கள் வீட்டில் உள்ள கண் திருஷ்டி, தீய சக்திகளை அது எடுத்துக்கொள்ளும். மீன்களை வளர்க்கும்போது ஒற்றைப்படையில் வளர்க்க வேண்டும். நான்கு கலர் மீன்களும், ஒரு கருப்பு மீனும் வளர்க்க வேண்டும். மீன்களை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். தொழில் செய்யும் இடத்தில் மீன் வளர்த்தால், தொழில் மென்மேலும் பெருகும்.
மீன்களை நாம் பார்க்கும்வண்ணம் கண்ணாடி தொட்டியில் வளர்ப்பது சிறந்தது. மீன்கள் வைத்திருக்கும் தொட்டியில் இயற்கை சம்பந்தமான பாசி, சங்கு போன்றவற்றை பயன்படுத்துவது நல்லதாகும். இரண்டு மீன்கள் இணைந்து நீந்திச் செல்வது வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கப்போவதை குறிக்கிறது. மீன் தொட்டிகளை வீட்டின் வடக்கு மற்றும் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு பக்கம் வைக்கக்கூடாது.
மீன் தொட்டியை வீட்டின் வாசலின் அருகில் வைப்பது சிறப்பு. படுக்கை அறை, சமையல் அறை, படிக்கும் அறையில் வைக்கக் கூடாது. அதிக இனப்பெருக்கம் செய்யும் மீன்களை வளர்க்கக் கூடாது. தன் இனத்தையே சாப்பிடும் மீன்களை வளர்க்கக் கூடாது. மீன்கள் இறந்துவிட்டால், அதை உடனடியாக தொட்டியில் இருந்து அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். இதெல்லாம் மீன் வளர்க்கையில் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.