நம் கண்கள் துடிப்பதை வைத்து நம் வாழ்வில் நல்லது நடக்கபோகிறதா? அல்லது கெட்டது நடக்கப்போகிறதா? என்பதை அறிந்துக்கொள்ள முடியும். இது நம் சாஸ்திரங்களிலேயே கூறப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பெண்களுக்கு இடது கண் பகுதி துடித்தால் நல்ல சகுனமாகும். உறவினரிடமிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படப் போவதாக அர்த்தம். எனவே, பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதாகும். இடது கண் பகுதி முழுவதுமாக துடித்தால் செல்வம், புகழ் தேடி வரும். இடது கண்ணின் மேல் இமைப்பகுதி துடித்தால், தற்போதிருக்கும் பிரச்னைகள் விரைவில் தீரும்.
இதுவே ஆண்களுக்கு இடது கண் துடித்தால், கஷ்ட காலம் ஏற்படப்போவதாக அர்த்தம். வம்பு, வழக்குகள் ஏற்படலாம். வாழ்க்கையிலும், தொழிலிலும் சவாலான தருணங்கள் ஏற்படும். இடது கண் துடிப்பது ஆண்களுக்கு நல்ல சகுனம் கிடையாது. எனவே, ஆண்களுக்கு இடது கண் துடிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
பெண்களுக்கு வலது கண் துடித்தால், அவர்கள் வாழ்க்கையில் கெட்ட சகுனத்தை குறிக்கிறது. வலது கண் கீழ் இமை துடித்தால், கணவருக்கு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படும். பெண்கள் தங்கள் தொழிலில் கெட்ட செய்திகளைக் கேட்கலாம். பெண்களுக்கு வலது கண் துடித்தால், வெவ்வேறு விதத்தில் கெட்ட செய்திகள் வரும் என்று சொல்லப்படுகிறது.
ஆண்களுக்கு வலது கண் துடிப்பது மங்கலகரமாக கருதப்படுகிறது. ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால், புகழ், பெருமை ஏற்படும். ஆண்களுக்கு தங்கள் தொழிலைப் பற்றிய நல்ல செய்தி வரலாம். ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நம்பிக்கையையும், எதிர்க்காலத்தையும், அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது.
எனவே, ஆண்களுக்கு வலது கண் துடித்தால், அவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நல்ல காரியம் நடைபெறும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை சீக்கிரம் தீரும். வலது கண்ணின் கீழ் தசை துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்குமே ஒரே நேரத்தில் இரண்டு கண்களும் மற்றும் புருவங்கள் சேர்ந்தது போல துடித்தால் அவர்களுக்கு நற்பலன் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.