Sri Sivaperuman
Sri Sivaperuman

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

Published on

ம்மையப்பனாய் உலகுக்கு அருள்புரியும் சிவபெருமானை விதவிதமான மலர்கள் கொண்டு வழிபட, பல்வேறு நலன்களைப் பெறலாம். அப்படி எந்த மலர் கொண்டு ஈசனை வழிபட, என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

வில்வம்: வில்வ இலை இல்லாமல் சிவபெருமானின் வழிபாடு முழுமை பெறாது. புராணங்களின்படி லட்சுமி தேவியின் வலது திருக்கரத்திலிருந்துதான் வில்வம் உருவானது எனக் கூறப்படுகிறது. சிவ வழிபாட்டில் வில்வ இலைகளை வைத்து பூஜித்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

தும்பைப் பூ: சிவபெருமானை பிரார்த்தனை செய்ய தும்பைப் பூவை பயன்படுத்தலாம். இதனால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நம்முடைய பாவங்கள் நீங்கும்.

எருக்க மலர்: முன் ஜன்ம பாவங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் சிவபெருமானை எருக்கம் பூவால் வழிபட வேண்டும். உடலாலும் மனதாலும் செய்த பாவங்கள் இந்த பூவினால் சிவபெருமானை வழிபடும்போது மன்னிக்கப்படும்.

தாமரை பூ: வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்க நினைப்பவர்கள் தாமரைப் பூ வைத்து ஈசனை வழிபாடு செய்யலாம். வெள்ளை, இளஞ்சிவப்பு போன்ற தாமரை மலர்கள் சிவனுக்கு மிகவும் ஏற்றது.

அரளி பூ: நினைத்த காரியம் நிறைவேற சிவபெருமானுக்கு அரளி பூவை வைத்து வழிபடலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூவால் வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெள்ளை அரளி மலரை வைத்து சிவனை வழிபட்டால் மனதுக்கு விருப்பமான மனைவி அமைவாள்.

ஊமத்தம் பூ: மகா சிவராத்திரி தினத்தில் ஊமத்தம் பூவால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம். அர்ச்சனை செய்தால் ஆபத்து விலகும். கண் தொடர்பான நோய்கள் மறையும்.

ரோஜா மலர்: சிவபெருமானை நினைத்து மனம் உருகி ரோஜா மலர்களைக் கொண்டு வழிபட்டால் பத்து ஆண்டு செய்த யாகத்திற்கு சமம் என புராணம் சொல்கிறது. வெறும் எட்டு ரோஜா மலர்களால் சிவபெருமானை வழிபடும் நபர்கள் கூட கயிலாச பதவி பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 
Sri Sivaperuman

முல்லை மலர்: முல்லை மலர் கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும்.

மரிக்கொழுந்து: மரிக்கொழுந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கிவிடும்.

நந்தியாவர்தம்: நந்தியாவர்தம் பூக்களை வைத்து சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டால் முன்ஜன்ம பாவங்கள் விலகும்.

செம்பருத்தி பூ: செம்பருத்தி பூக்களைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சகல ஐஸ்வர்யங்களும் தோன்றும்.

logo
Kalki Online
kalkionline.com