குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

Guru Bhagavan
குரு பகவான்
Published on

ம்மில் பல பேருக்கும் குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரியாமல், இருவரும் ஒன்றே எண்ணி கோயிலில் வழிபடுவோம். தட்சிணாமூர்த்தி வேறு, குரு பகவான் வேறு. தட்சிணாமூர்த்தி என்பவர் சிவ அம்சம். குரு பகவான் என்பவர் நவக்கிரகங்களில் ஒருவர். எனவே, குரு பெயர்ச்சியின்போது நவக்கிரங்களில் ஒருவரான குரு பகவானுக்குதான் அர்ச்சனை, பரிகார பூஜைகள் எல்லாம் செய்ய வேண்டும். ஆனால், சிலர் வியாழக்கிழமைகளில்  தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் ஆடை உடுத்தி, கொண்டைக்கடலை மாலை சார்த்தி அர்ச்சனை செய்வதைக் காணலாம்.

தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி வெள்ளை உடை அணிபவர். குரு பகவானோ, மஞ்சள் நிற உடையில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பார். குரு பகவானுக்குரிய தானியம் கொண்டைக்கடலை. தியானத்தில் அமர்ந்திருக்கும் ஞான குருவான தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாத்தி கொண்டைக்கடலை மாலைகள் சாத்துவது தவறு.

Dakshinamurthy
தட்சிணாமூர்த்தி

ஞானத்தை தருபவர் தட்சிணாமூர்த்தி. இவர் சன்னிதி முன்பு அமர்ந்து மனம் ஒருநிலைப்பட தியானம் செய்யலாம். சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் உருவமே தட்சிணாமூர்த்தி ரூபம். இவர் கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து காட்சி தருவார்.

ஞான குரு வேறு, நவக்கிரக குரு வேறு. தேவர்களின் ஆச்சாரியராகத் திகழ்பவர் வியாழன் என அழைக்கப்படும் குரு பகவான். நவக்கிரக குருவுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தட்சிணாமூர்த்தி செய்வது தவறு. ஞானத்தைத் தருபவர் தட்சிணாமூர்த்தி. வாழ்க்கையில் சகல சுகங்களையும் தருபவர் குரு பகவான். ஆத்ம ஞானத்துக்கு தட்சிணாமூர்த்தியையும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு குரு பகவானையும் வழிபட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பேரீச்சம் பழக் கொட்டைகளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Guru Bhagavan

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்ற சொல் வழக்கு உண்டு. வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து அர்ச்சனை செய்யலாம். இரவு நேரங்களில் வானில் பார்க்கும் பொன்னிறத்தில் மின்னும் ஒரு கிரகமாக இருப்பது வியாழன் எனப்படும் குரு கிரகமாகும். நம் பண்டைய தமிழ் வானியல் சாஸ்திர அறிஞர்கள் வியாழன் எனும் கிரகத்தை, ‘பொன்னன்’ என்கிற பெயர் கொண்டு அழைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com