பேரீச்சம் பழக் கொட்டைகளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

dates seed powder
dates seed powder

நாம் எப்பவும் பலா, நாவல், மாம்பழம் போன்ற பல வகைப் பழங்களை சாப்பிட்டுவிட்டு அவற்றின் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம். அந்த விதைகளிலும் பலவிதமான ஊட்டச் சத்துக்கள் அடங்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. பேரீச்சம் பழ விதைகளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்த விதைகளை பொடி பண்ணி மற்ற உணவுகளுடன் சேர்த்து உண்ணும்போது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. செரிமான செயல்பாடுகளை சீராக்க இதிலுள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. இதனால் ஜீரணம் சிறப்பாவதுடன், நீண்ட நேரம் பசியுணர்வு தடுக்கப்பட்டு எடை அளவையும் சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடிகிறது.

டேட் சீட் பவுடர் ஹைப்பர் க்ளைசெமிக் நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி செல்கள் சிதைவடைவதைத் தடுக்கின்றன. இதனால் இதயநோய், கேன்சர் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.

இப்பவுடரை உண்ண ஆரம்பிக்கும்போது சிறிய அளவில் எடுத்துக்கொண்டு அதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றத்தை, குறிப்பாக இரத்த சர்க்கரை அளவை, உன்னிப்பாக கண்காணித்து அதற்கேற்ப முடிவெடுப்பது நலமாகும்.

இதையும் படியுங்கள்:
ஒலிம்பிக் போட்டிகளில் நடந்த சில சுவாரசியங்கள்!
dates seed powder

ஏற்கெனவே உடல்நலக் கோளாறின் காரணமாக மருந்து  எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவுப் பழக்கத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் அறிமுகப்படுத்தும் முன் மருத்துவரைக் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

டேட் சீட் பவுடரை குறைந்த அளவில் பழச் சாறு, ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்தும், குக்கீஸ், பிரட் போன்ற பேக்கரி தயாரிப்புகளில் கலந்தும், காபிக்கு ஒரு மாற்றாகவும் உபயோகித்து பலனடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com