கோயில்கள் செய்த கின்னஸ் சாதனைகள் தெரியுமா?

Guinness World Record Temples
Guinness World Record Temples
Published on

னிதர்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே கின்னஸ் சாதனைகளைப் படைக்கவில்லை. சில கோயில்களும் கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளன. அவற்றின் தொகுப்புதான் இந்தப் பதிவு.

ற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலானது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு அருகில் 2 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. மதுரையை எரித்த கண்ணகியே இங்கு பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆண்டுதோறும் மலையாள கும்ப மாதத்தில் (மார்ச் மாதம்) ‘பொங்களா' என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. அதில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 1997ம் ஆண்டு நடைபெற்ற ‘பொங்களா’ திருவிழாவில் ஒரே நாளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். இது ஒரு கின்னஸ் சாதனை. 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்ற வகையில் இது கின்னஸ் சாதனை படைத்தது.

லகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குகை அருகே இந்த சிலை எழுப்பப்பட்டுள்ளது. கம்பிரமாகக் காட்சியளிக்கும் இந்த சிலையின் உயரம் 140 அடிகள். இதனை 15 இந்திய சிற்பிகள் 3 வருட காலத்தில் உருவாக்கினார்கள். செலவு 3 கோடி ரூபாய். இது பிரமாண்ட கோயில் சிலை என்ற வகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இங்கு 2015ம் ஆண்டு நடைபெற்ற தைப்பூசம் அன்று 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போனார்கள். இதுவும் ஒரு கின்னஸ் சாதனையாகும்.

புதுடெல்லியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தை அக்சர்தாம் அல்லது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்று குறிப்பிடுகிறார்கள். புதுடெல்லியின் முக்கிய நகரமான நொய்டாவில் யமுனை ஆற்றங்கரையின் ஓரத்தில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வைணவ ஞானியான சுவாமி நாராயணின் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் இரும்பு உள்ளிட்ட எந்த உலோகத்தையும் பயன்படுத்தாமல், ராஜஸ்தான் மாநிலத்தில் காணப்படும் இளஞ்சிவப்பு மணல்பாறை மற்றும் இத்தாலிய கர்ரரா சலவைக் கல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. சுவாமி நாராயணன் நினைவாக கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம் 141 அடி உயரம், 316 அடி அகலம், 370 அடி உயரம் கொண்டது.

இந்திய பண்பாடு, வரலாற்றில் பங்களித்தவர்களின் சிற்பங்கள் இக்கோயிலில் இடம்பெற்றுள்ளன. மேலே இருந்து பார்க்கும்போது, தாமரை வடிவில் தோட்டம் அமைந்துள்ளது போல் தோன்றும். உலக அறிவு மேதைகளின் பொன்மொழிகள் இக்கோயில் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான அதிசயங்கள் நிறைந்துள்ள இந்த ஆலயம் கடந்த 2005ம் ஆண்டு மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. 2007ம் ஆண்டு, 'உலகின் மிகப்பெரிய அனைத்தும் கொண்ட இந்துக் கோயில்' என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
வயதான தோற்றத்தை துரிதப்படுத்தும் 10 வகை உணவுகள்!
Guinness World Record Temples

ந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு 30,000 முதல் 40,000 பார்வையாளர்களும், புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1) 75,000 பார்வையாளர்களும் வருகை தருகின்றனர். உலகிலேயே அதிகம் பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் இந்து கோயில் இதுதான் என கின்னஸ் சாதனை படைத்தது உள்ளது. திருப்பதி கோயில் தற்போது உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட கோயிலாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. திருப்பதி கோயிலானது உலகின் பணக்கார இந்து கோயிலாகும்.

த்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன் ஸ்ரீ மஹாகாளேஸ்வா் கோயில் வளாகத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனா். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான உஜ்ஜைன் ஸ்ரீ மஹாகாளேஸ்வா் கோயில் நிர்வாகக் குழு மற்றும் மத்திய கலாசாரத் துறை இணைந்து ஆகஸ்ட் 5, 2024 திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் சுமார் 1,500 போ் சோ்ந்து உடுக்கை வாசித்தனா். ஆகஸ்ட் 5 , 2024 அன்று நடந்த இந்த நிகழ்வு, கின்னஸ் உலக சாதனையில் அதிகம் போ் உடுக்கை வாசித்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com