முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்த காசி சிவன் கோயில் தெரியுமா?

Do you know the Kashi Shiva temple consecrated by Lord Muruga?
Do you know the Kashi Shiva temple consecrated by Lord Muruga?https://www.quora.com

த்தனையோ சிவன் கோயில்களைப் பார்த்திருப்பீர்கள்? ஆனால், மறைத்து வைத்திருக்கும் கோயிலை இதுவரை பார்த்ததுண்டா? காசியில் பாதாளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிவன் கோயில், நாம் நிற்கும் இடத்திற்கு கீழேயே கூட இருக்கும். ஆனால், கோயிலைத் தேடி அலைந்துகொண்டிருப்போம். அத்தகைய வித்தியாசமான ஸ்ரீ பிதா மஹேஸ்வரர் கோயில் வாரணாசியிலுள்ள சீத்லாகலி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மறைந்திருப்பதால், ஔரங்கசிப் போன்ற மன்னர்களின் படையெடுப்பின்போது அழிக்கப்படாமல் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியிலுள்ள மிகவும் புனிதமான சிவன் கோயில்களில் பிதாமஹேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் மிகவும் ரகசியமாகவும், மறைத்தும் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு மூர்த்தமாக தோன்றியது என்று கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் தோன்றும்போது முக்கியமான தீர்த்தக் குளங்களுடன் தோன்றியதாகவும் இப்போது தீர்த்த குளங்கள் இல்லை என்றும் கூறுகிறார்கள். இக்கோயிலை பற்றிய குறிப்புகள் கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காசி விஸ்வநாதருக்கு இணையான பழைமையான லிங்கம் இது என்று நம்பப்படுகிறது.

கந்தபுராணத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், முருகப்பெருமான் இந்த சிவலிங்கம் காசியிலேயே மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான சிவலிங்கம் என்று கூறுகிறார். சிவனின் வழிகாட்டுதலில் இக்கோயிலை உருவாக்கியது முருகப்பெருமான் என்று கந்தபுராணத்தில் கூறப்படுகிறது.

பிதாமஹேஸ்வரர் சிவலிங்கம் 40 அடி கீழே பூமியில் இருக்கிறது. இந்த லிங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அதனாலேயே மக்கள் மேலே அமைக்கப்பட்டிருக்கும் ஓட்டையிலிருந்து சிவனை தரிசிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். சிவனின் லிங்க திருமேனியிலிருக்கும் புள்ளியிலேயேதான் அசைவில்லாமல் வெறுமையாக இருந்த பிரபஞ்சத்தில் படைத்தல் நிகழ ஆரம்பித்தது. அதனாலேயே இக்கோயில் பிதாமஹேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறதாம்.

இக்கோயில் முக்கியமான நாட்களில் மட்டுமே திறக்கப்படும். ஏகாதசி, சிவராத்திரி போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே கோயில் திறக்கப்பட்டு சிவபெருமானின் தரிசனம் கிடைக்கும். ஆனால், லிங்கத்திற்கு மேலே அமைக்கப்பட்டுள்ள ஓட்டை வழியாக சிவபெருமானை வருடம் முழுதும் தரிசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக கற்கள்… காரணங்களும், அறிகுறிகளும்!
Do you know the Kashi Shiva temple consecrated by Lord Muruga?

பிதாமஹேஸ்வரரை தரிசித்தால், தரிசிப்பவர் பரம்பரையில் வரும் அடுத்த 20 தலைமுறையினருக்கு முக்தியை தருவார் என்று கூறப்படுகிறது. ஜல அபிஷேகம் மற்றும் வில்வ அபிஷேகம் லிங்கத்தின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் ஓட்டை வழியாகவே செய்யப்படுகிறது.

இந்த சிவலிங்கம் 40 அடி ஆழத்தில் பூமியில் அமைந்துள்ளதால், எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். கோயிலுக்கு உள்ளே செல்லும் பாதை ஆபத்தானது என்பதால் வருடத்திற்கு சில முக்கிய நாட்கள் மட்டுமே கோயில் திறக்கப்படுவதாக கூறுகிறார்கள். பித்ரு தோஷத்திலிருந்து விடுபட, பிதாமஹேஸ்வரரை தரிசிக்க மக்கள் தினமும் இக்கோயிலுக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com