Kidney stones in children.
Kidney stones in children.

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக கற்கள்… காரணங்களும், அறிகுறிகளும்!

Published on

சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் பெரியவர்களுடன் தொடர்புறைவை. ஆனால் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படலாம். யாராக இருந்தாலும் சிறுநீரகக் கற்கள் அசௌகரிம் மற்றும் அதிக வலியை ஏற்படுத்தக்கூடியது. இது குழந்தைகளின் நல்வாழ்வையும் தினசரி நடவடிக்கைகளையும் வெகுவாக பாதிக்கும். எனவே இப்பதிவில் குழந்தைகளுக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம். 

குழந்தைகளுக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. 

  • அதிகப்படியான உப்பு, அதிக ஆக்சிலேட் அல்லது குறைந்த கால்சியம் உட்கொள்ளல் போன்றவற்றாலும் சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். 

  • குழந்தைகளுக்கு சிறுநீர் பாதையில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள் பிறக்கும்போதோ அல்லது இடையில் ஏற்பட்டாலோ கல் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. 

  • சில குழந்தைகளுக்கு ஹைப்பர்கால்சியூரியா அல்லது சிஸ்டினுரியா போன்ற சிறுநீரகக் கல் உருவாவதற்கு வழிவகுக்கும் அடிப்படை வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகள் இருக்கலாம். 

  • மேலும் சிறுநீரகக் கற்களின் குடும்ப வரலாறு ஒரு குழந்தைக்கு கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. 

குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்: 

  1. சிறுநீரகக் கற்கள் உள்ள குழந்தைகளுக்கு அடி வயிறு அல்லது பக்கவாட்டு பகுதியில் கடுமையான வலி ஏற்படலாம். இந்த வலி கடுமையானதாகவும், இடுப்பு வரை பரவக்கூடியதாகவும் இருக்கும். 

  2. சிறுநீரில் ரத்தம் வருவது, சிறுநீரக கற்களின் பொதுவான அறிகுறியாகும். சிறுநீர் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றலாம். 

  3. சிறுநீரகக் கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும்போது அசௌகரியம் அல்லது வலி ஏற்படலாம்.

  4. சில சமயங்களில் சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் அதிகமாக வீசும். 

  5. சில நேரங்களில் குழந்தைகளுக்கு குமட்டல் மற்றும் வாந்தி வரலாம். 

  6. சிறுநீரகக் கற்களால் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
African Lungfish: 4 ஆண்டுகள் வரை உணவில்லாமல் வாழக்கூடிய அதிசய மீன்!
Kidney stones in children.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்தப் பதிவு தகவலைத் தெரியப்படுத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டதுதானே தவிர, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம். 

logo
Kalki Online
kalkionline.com