
நாம் வீட்டை சுத்தம் செய்வதற்காகத் பயன்படுத்தும் துடைப்பத்தை எந்த நாளில் வாங்க வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூட வாஸ்து சாஸ்திரத்தில கூறப்பட்டுள்ளது. பழைய துடைப்பத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரப்படி துடைப்பத்திற்கு மரியாதை செய்வது அன்னை மகாலட்சுமியை மகிழ்விக்கும். நம் வீட்டில் மகாலக்ஷ்மியை வரவழைக்கும். துடைப்பத்தையும், முறத்தையும் எங்கு எப்படி வைப்பது என்பதற்கு சில விதிமுறைகள் நாம் கடைபிடிக்க அது மகாலக்ஷ்மியை திருப்திபடுத்தும். உங்கள் கனவில் துடைப்பம் வந்தால் அது நல்லதாக கருதப்படுகிறது. துடைப்பம் வீட்டின் செல்வச் செழிப்பின் அடையாளமாகும். இதை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும். வீட்டிற்கு வருபவர் யாரும் உங்கள் துடைப்பத்தைப் பார்ப்பது நல்லதல்ல. வீட்டிற்கு வெளியே துடைப்பம் வைப்பதை தவிர்க்க வேண்டும். துடைப்பத்தின் மீது கால் வைத்தால் மகாலக்ஷ்மி கோபப்படலாம். எனவே கால் படாத இடத்தில் அதை வையுங்கள்.
துடைப்பத்தை தலைகீழாக வைக்காதீர்கள். இப்படி வைப்பதால் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். சரியாக வைத்தால்தான் நேர்மறை சக்தி அதிகரிக்கும். துடைப்பத்தை எப்போதும் சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும் போது அதில் முடி சிக்கிக் கொண்டிருக்கும். முடிகளை எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு அதை சுத்தமாக வையுங்கள். வீட்டில் இருந்து வெளியே ஒருவர் சென்றபிறகு பெருக்குவதைத் தடுக்க வேண்டும். ஒருமணி நேரம் கழித்துதான் பெருக்க வேண்டும்.
வீட்டைக் காலி செய்யும் போது சிலர் பழைய துடைப்பத்தை விட்டுச் செல்வார்கள். அப்படி வைத்தால் உங்கள் வீட்டு மகாலக்ஷ்மியை நீங்கள் குடியிருந்த வீட்டிலேயே விட்டுச் செல்வதாக அர்த்தம். அதைத் தனித்தனியாக பிரித்துப் போடுவது நல்லது.
செவ்வாய், சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்கலாம் வீட்டில் செல்வம் பெருகும், பொருளாதார நிலை மேம்படும். தேய்பிறை நாட்களில் துடைப்பம் வாங்குவது நல்லது. துடைப்பத்தை தானமாகக் கொடுக்காதீர்கள். I