குபேர கடாட்சம் தரும் பச்சை குங்குமத்தின் ரகசியம் அறிவீர்களா?

Do you know the secret of green kumkum that gives Kubera Kataksam?
Do you know the secret of green kumkum that gives Kubera Kataksam?https://www.facebook.com

ம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் குங்குமத்தை, ‘கிருமிநாசினி’ என்றும் கூறுவார்கள். மஞ்சள், தண்ணீர், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்தே குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் மங்கலகரமான பொருளாகக் கருதப்படுகிறது.

குங்குமம் வைத்துக்கொள்வதால் உடல் சூடு குறைந்து, உடலில் காந்த சக்தி அதிகரிக்கும். பெண்கள் தினமும் குங்குமம் வைப்பதால், மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட குங்குமம் கருஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு என்று சிவப்பு நிறத்திலேயே இருக்கும். ஆனால், பச்சை நிற குங்குமத்தை பார்த்ததுண்டா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பச்சை குங்குமத்தை, ‘குபேர குங்குமம்’ என்றும் கூறுவார்கள். இது உடல் நலம், செல்வச் செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும். இந்த பச்சை குங்குமம் மகாலட்சுமியையும், குபேரனையும் பூஜை செய்யப் பயன்படுத்தும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேரனுக்கு என தனிச் சன்னிதி அமைந்துள்ளது. இங்கே குபேரன் சித்திரலேகாவுடன் தாமரையில் அமர்ந்திருக்கிறார். இங்கே பச்சை நிற குங்குமத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள். இது இந்தக் கோயிலின் தனித்துவமாகக் கருதப்படுகிறது.

குபேரன் பிறந்த நட்சத்திரமான பூரட்டாதியில் குபேர ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் அனைத்து மாதங்களும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பச்சை குங்குமம், பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் பச்சையம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஈரோட்டில் அவல்பூந்துறையில் உள்ள இரட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயிலில் பச்சை நிற மூலிகைப்பொடி குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மஞ்சள், கற்றாழை, வேம்பு, அரசமர இலை, துளசி ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குங்குமம் மக்களுக்கு ஆரோக்கியத்தையும், நன்மையையும் தருவதாகக் கூறப்படுகிறது.

குபேர குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக்கொள்வதால், செவ்வ செழிப்பு, வெற்றி, வளம் போன்றவை கிடைக்கும். பணப்பிரச்னை, கல்வித்தடை, கடன் தொல்லை, திருமணத்தடை, குடும்ப சண்டை ஆகியவற்றை போக்கக்கூடியது. நினைத்த காரியம் வெற்றியடைய பச்சை குங்குமத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
'காஜி நேமு' என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
Do you know the secret of green kumkum that gives Kubera Kataksam?

பொதுவாக, பச்சை குங்குமத்தை தினமும் பயன்படுத்தலாம். குறிப்பாக, புதன் கிழமைகளில் பயன்படுத்துவது நல்ல பலனைக் கொடுக்கும். இது மஞ்சள், குங்குமம் விற்கும் கடைகளில் கிடைக்கும். இல்லையெனில் நாட்டு மருந்து கடைகளிலும் விற்கப்படுகிறது. இக்குங்குமத்தை சாதாரண குங்குமம் பயன்படுத்துவது போலவே பயன்படுத்தலாம்.

இந்த குங்குமத்தை வாங்கி கோயிலில் வைத்து பூஜித்து பின் வீட்டில் பூஜையறையில் வைத்து தினமும் பயன்படுத்தலாம். இந்த குங்குமத்தை வீட்டில் உள்ளவர்களைத் தவிர்த்து, வெளியாட்களுக்குத் தரக்கூடாது. பச்சை குங்குமத்தை தொடர்ந்து 41 நாட்கள் வைத்து கொண்டு வருவது நல்ல பயனைத் தரும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com