'காஜி நேமு' என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?

Do you know what is 'Kaji Nemu'?
Do you know what is 'Kaji Nemu'?https://www.amazon.in
Published on

‘காஜி நேமு’ (Kaji Nemu) என்பது அஸ்ஸாமில் அதிகமாய் உபயோகப்படுத்தப்படும் லேசான கசப்பு, புளிப்பு சுவை கொண்ட எலுமிச்சம் பழம். சமைக்கும் உணவுகளுக்கு இது தரும் அதீதமான சுவைக்கும், மணத்திற்காகவும், இதிலடங்கியுள்ள மருத்துவ குணங்களுக்காகவும் இங்கு இதன் விலை மிக அதிகம். இதன் தனித்துவமான சுவையை ஒரு முறை அனுபவித்தவர்கள் அதற்கு அடிமையாகிவிடுவது நிச்சயம். இப்பழத்திலுள்ள ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்த அஸ்ஸாம் எலுமிச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C மிக அதிகமாக உள்ளன. இவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், கொலாஜன் உற்பத்தியைப் பெருக்கவும், ஃபிரிரேடிக்கல்கள் மூலம் செல்களுக்கு ஏற்படும் சிதைவைத் தடுக்கவும் உதவி புரிகின்றன.

இதிலுள்ள அதிகளவு நீர்ச்சத்து தினசரி உடலுக்குத் தேவையான திரவ அளவை புத்துணர்ச்சியோடு சேர்த்து அளிக்கிறது. நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யும் இதன் குணமானது சீரான செரிமானம், இரத்த ஓட்டம், உடல் உஷ்ண நிலையை சமநிலையில் பராமரித்தல் போன்ற இயக்கங்களுக்கு உதவி புரிகிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்வை வளமாக்கும் ஜப்பானிய ‘வாபி சாபி’ தத்துவத்தின் 5 முக்கிய போதனைகள்!
Do you know what is 'Kaji Nemu'?

இந்தப் பழம் அதிகளவு கலோரி கொண்டது. இதன் சுவைக்காக இப்பழம் சேர்த்து சமைத்த உணவுகளை தாராளமாக உட்கொள்ளலாம். இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து வயிறு நிறைந்த திருப்தியான உணர்வைத் தரும். இதனால் நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாதிருக்கச் செய்யும்.

சருமம் பள பளவென இருக்க உதவுவது வைட்டமின் C. இந்த அஸ்ஸாம் எலுமிச்சையில் வைட்டமின் C மிக அதிகம் உள்ளது. வயதானது போன்ற தோற்றத்தைத் தருவதைத் தடுக்கும் குணம் கொண்ட இந்தப் பழம், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், சருமத்தில் உண்டாகும் கறைகளை நீக்கவும் உதவுகிறது. இந்த காஜி நேமுவை நாமும் பயன்படுத்துவோம்; ஆரோக்கியப் பலனடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com