மகாளய அமாவாசையின் சிறப்புகள் பற்றித் தெரியுமா?

Do you know the special features of Mahalaya Amavasya?
Do you know the special features of Mahalaya Amavasya?Image Credits: Times Now Kannada
Published on

ற்ற நாட்களில் வரும் அமாவாசையைக் காட்டிலும் புரட்டாசி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோரை வழிப்படும் வழக்கம் இருக்கிறது. மூன்று அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசையாகும். இறந்துப்போன நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை என்றும், முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாளே புரட்டாசி மகாளய அமாவாசையென்றும், மூன்றாவதாக திரும்பவும் பூமியிலிருந்து நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திற்கு செல்லும் நாளே தை அமாவாசை என்கிற நம்பிக்கை இருக்கிறது.

'மகா' என்றால் பெரிய ஆன்மாக்கள் லயிக்கும் இடமே 'ஆலயம்' என்று அர்த்தம். அதாவது நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் இந்த பூலோகத்திற்கு வந்துலயிக்கும் நாட்களே மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த மகாளய பட்சம் புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கிறது. அதனால்தான் புரட்டாசி  மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்டர் 18 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை உள்ளது. மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதீகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால், நம் முன்னோர் களின் ஆசியுடம் நம் வாழ்வும் சிறப்படையும் என்று நம்பப்படுகிறது. சாதாரண அமாவாசை தினத்திலே நாம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.

ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல் நம் ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுப்பதுதான் மகாளய அமாவாசையின் தனிச்சிறப்பாகும். பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட அவர்களுக்கு மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பெருமாளின் கண்கள் ஏன் மூடப்பட்டிருக்கிறது தெரியுமா?
Do you know the special features of Mahalaya Amavasya?

இந்த மகாளய பட்சநாளில் எமதர்மன் பித்ருலோகத்தில் இருக்கும் மூதாதையர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பார் என்று நம்பப்படுகிறது. நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவாக கருதப்படுகிறது. இந்த பூஜையை சாஸ்த்திர சம்ரதாயத்துடன் செய்து பிண்டம் வைத்து எள்ளும், தண்ணீரும் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com