யாகத்தின் அறிவியல் நன்மைகள் என்ன தெரியுமா?

Do you know what are the scientific benefits of Yagya?
Do you know what are the scientific benefits of Yagya?
Published on

ம் வீடுகளில், கோயில்களில் யாகங்கள் செய்யும்போது ஏற்படும் புகையில் ஆன்மிகம் மட்டுமல்ல, அதில் அறிவியலும் உள்ளது. ஆன்மிக செயல்பாடுகள் அனைத்திலும் ஒரு அறிவியல் நிச்சயம் இருக்கும். யாகத்தில் இருந்து வெளியாகும் புகையில் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பூர்வ காலங்களில் முனிவர்கள் மற்றும் ரிஷிகள் யாகம் நடத்துவதும் அதை அசுரர்கள் தடுக்க முயற்சிப்பதும் நாம் புராண கதைகளில் கேட்டதுண்டு. சில யாகங்களைத் தொடங்கி முடிப்பதற்காக கடுமையான முயற்சிகளை முனிவர்கள் எடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் யாகத்தின் சக்தி எத்தகையது என்பதைக் காட்டுகிறது.

இந்த யாகங்கள் ஏன் செய்யப்பட்டன, அவற்றின் பலன் என்ன என்பதை இனி காண்போம். உலகில் மிக அடிப்படையான சக்தி களங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று வெப்ப சக்தி. இரண்டாவது சப்தங்களின் சக்தி. யாகத் தீயினால் ஏற்படும் வெப்பமும் மந்திர ஒலியினால் ஏற்படும் சப்தமும் இணைந்து குறிப்பிட்ட அலைவரிசையில் நம் உடலிலும் மனதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை ஆன்மிகப் பாதையில் உயரச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாத 5 எண்ணெய்கள்!
Do you know what are the scientific benefits of Yagya?

மேலும், யாகப் பொருட்களை தீயில் அர்ப்பணம் செய்யும்போது அவை யாகத் தீயில் மாற்றமடைந்து அதன் மணம் பல திசைகளிலும் பரவும். யாகத் தீயின் புகை நீண்ட தூரம் பரவுவதால் அதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

அக்னி குண்டத்தின் அமைப்பு பிரமிடை போன்ற ஒரு அமைப்பாகும். ‘பிரமிட்’ என்கிற வார்த்தையின் அர்த்தமே நடுவில் தீ எரிவது என்றுதான் அர்த்தம். இந்த வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட யாக குண்டம் யாகத்தின்போது வெளிப்படும் அபரிமிதமான சக்தியை முறையாக வெளிப்படுத்தும்.

மேலும், யாகத்தின்போது உச்சரிக்கப்படும் சமஸ்கிருத மந்திரங்களின் ஒலி அலைகள் பிரபஞ்ச சக்தியை நமக்குள் கொண்டுவரும் தன்மையுடையவை. சமீபத்திய ஆராய்ச்சியின்படி காயத்ரி மந்திரம் ஒரு நொடியில் 1,10,000 ஒலி அலைகளை வெளியிடுவதாக சொல்கிறது. யாகங்கள் எப்போதும் சூரிய ஒளியில்தான் நடத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
சிவப்பு நிற ரயில்களுக்கும் நீல நிற ரயில்களுக்கும் என்ன வித்தியாசம்?
Do you know what are the scientific benefits of Yagya?

யாக குண்டத்தில் இருந்து நெய்யின் மூலம் வரும் நெருப்பு மற்றும் புகை அணு கதிர்வீச்சை தடுக்கும் சக்தியுடையது. பசுவின் பாலும் பசுஞ்சாணமும் அணு கதிர்வீச்சை தடுக்கக்கூடியது என்று தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, யாகங்கள் ஆன்மிக செயல்முறைக்கும் சரி, ஆரோக்கியத்திற்கும் சரி மிகுந்த நலம் பயப்பதாகவே இருந்து வந்துள்ளது.

இனியாவது யாகங்கள் நடக்கும் இடத்தில் புகை இருந்தால் தொலைவே செல்லாமல், அதை சுவாசித்து நன்மைகளைப் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com