வாஸ்து முறைப்படி வீட்டில் வைக்கவேண்டிய ஓவியங்கள் என்னென்ன தெரியுமா?

Do you know what paintings should be kept at home according to Vastu?
Do you know what paintings should be kept at home according to Vastu?https://www.magicbricks.com

ண்டைய காலம் முதலாகவே இந்தியர்கள் வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். வீடு கட்டுவது முதல், வீட்டில் வைக்கும் பொருட்கள் வரை அனைத்தையும் வாஸ்து பார்த்து செய்வதன் மூலமாக வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி முதல் எல்லா வளங்களையும் பெறலாம் என்று கூறப்படுகிறது. இன்று வாஸ்து முறைபடி வீட்டில் மாட்டினால் பலன்கள் தரக்கூடிய ஓவியங்கள் பற்றி காணலாம்.

1. ஓடும் 7 குதிரைகள் ஓவியம்: வாஸ்து முறைப்படி, குதிரைகள் வேகத்திற்கும், பலத்திற்கும் மற்றும் சுறுசுறுப்பிற்கும் பெயர் போனதாகும். எனவே, ஓடும் 7 குதிரைகளை கொண்ட ஓவியத்தை வீட்டில் மாட்டினால், செல்வ செழிப்பு, பணம், வெற்றி அனைத்தும் கிடைக்கும். இந்த ஓவியத்தை வீட்டின் படுக்கையறையில் மாட்டுவதால் பாசிட்டிவ் எனர்ஜியை ஈர்ப்பது மட்டுமில்லாமல், வெற்றியையும் தேடித் தரும்.

2. ஆமை ஓவியம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஆமைகள் ஓவியத்தை வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டத்தையும், ஆயுளையும் அதிகரிக்கும். இந்த ஓவியத்தை படுக்கையறையில் மாட்டுவதால், ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து மனதை அமைதியாக்க உதவுகிறது.

3. பீனிக்ஸ் ஓவியம்: பீனிக்ஸ் பறவை மறுபிறவி, மாற்றம், புதுத் தொடக்கம் போன்றவற்றை குறிக்கிறது. பீனிக்ஸ் ஓவியத்தை வீட்டில் வைப்பதால் புதுப்பித்தல், வளர்ச்சி போன்றவற்றை தரக்கூடியதாகும். இதை வீட்டின் படுக்கையறையில் மாட்டி வைப்பதால், தடைகளை உடைத்து வெற்றியைத் தரும்.

4. நீர் வீழ்ச்சி ஓவியம்: நீர் வீழ்ச்சி ஓவியம் தாராளமான செல்வம், உயிர்ச்சக்தி போன்றவற்றை தரும். நீர் வீழ்ச்சி ஓவியம் வழிந்தோடக்கூடிய ஆற்றல், அமைதி போன்றவற்றைத் தரும். இந்த ஓவியத்தை படுக்கையறையில் மாட்டுவதால், வீட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால சரும அரிப்பை போக்கும் 5 வீட்டு வைத்திய முறைகள்!
Do you know what paintings should be kept at home according to Vastu?

5. மயில் ஓவியம்: மயில் என்பது அழகு, நளினம், கருணை போன்றவற்றை குறிப்பதாகும். வீட்டில் மயில் ஓவியம் வைப்பதால் குடும்பத்தில் நல்லிணக்கம், காதல் போன்றவை மேலோங்கும். இந்த புகைப்படத்தை படுக்கையறையில் மாட்டினால், கணவன் மனைவியிடையே உறவு வலுப்பெறும்.

6. கோய் மீன்களின் ஓவியம்: கோய் மீன்கள் ஓவியம் பணம், செல்வம், அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாகும். இது அதிகப்படியான வெற்றி, முன்னேற்றம் போன்றவற்றை தரக்கூடியதாகும். வீட்டின் படுக்கையறையில் இந்தப் படத்தை மாட்டுவது மிகவும் அதிஷ்டமாகும்.

7. யானைகளின் ஓவியம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி, யானை வலிமை, ஞானம், அறிவு போன்றவற்றை குறிக்கக்கூடியதாகும். யானை அதனுடைய குட்டிகளுடன் இருப்பது போன்ற ஓவியம் குடும்பத்தில் மகிழ்ச்சி, சந்தோஷம், அன்பு போன்றவற்றை அதிகரிக்கும். இந்த ஓவியத்தை படுக்கையறையில் மாட்டுவதால், கணவன், மனைவியிடையே உறவு நீடிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com