பீமனின் பேரனை வழிபடும் கோவில்… எங்குள்ளது தெரியுமா?

Temple
Temple
Published on

பாண்டுவின் ஐந்து புத்திரர்களில் ஒருவரான பீமனின் பேரனுடைய கோவில் பற்றிய தகவலைதான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.

பீமனின் புதல்வன் கடோத்கஜன் ஒரு மிகப்பெரிய வீரன். இவர் மகாபாரத போரில் வீரதீர செயல்களின்மூலம் பாண்டவர்கள் தரப்பில் அசைக்கமுடியாத வீரராக விளங்கினார். கடோத்கஜனால் கௌரவர்கள் தரப்பினருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இப்படிப்பட்ட ஒரு மாவீரருக்கு பிறந்தவர்தான் பார்பரிகன். தனது தந்தையைவிட மிகப்பெரிய வீரராக இருந்து வந்த பார்பரிகன், எந்தத் தரப்பிற்கு செல்கிறாரோ, எதிர்தரப்பினர் ஒரே நிமிடத்தில் ஒருவர்க்கூட இல்லாமல் தோற்றுவிடுவர்.

போருக்கு முன்னர் பார்பரிகன் தனது தாயிடம் ஒரு சத்தியம் செய்தார். அதாவது எந்தத் தரப்பில் பலம் குறைகிறதோ, அந்தத் தரப்பில் நான் போரிடுவேன் என்று சபதம் எடுத்தார். இதனால், ஏதோ ஒரு தரப்பிற்கு வெற்றி என்பது நிச்சயம் கிட்டாது, அதேபோல் இருதரப்பிலுமே ஒருவர் கூட இல்லாமல் உயிரிழக்க நேரிடும் என்பதால், கிருஷ்ணர், ஒன்றைச் செய்தார்.

பிராமணர் போல வேஷம் தரித்து பார்பரிகனிடம் சென்ற கிருஷ்ணர், தலையை தக்ஷனை கேட்டார். பார்பரிகனும் தனது தலையை வழங்கினார். சக்கராயுதத்தால், பார்பரிகனின் தலை தனியே வந்தது. அவர் இறப்பதற்கு முன் கடைசி ஆசையாக, நான் இறந்தும் மகாபாரத போர் முடியும்வரை அப்போரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார். ஆகையால், போர்க்களத்தைப் பார்த்தவாரு ஒரு மலையின் மேல் அவரது தலை மட்டும் உயிருடன் ஆசிர்வதிக்கப்பட்டு வைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இவரின் இந்த தியாகத்தால், கிருஷ்ணர் பார்பரிகனை ஆசிர்வதித்தார். கலியுகத்தில் உன்னை கடவுளாக நினைத்து மக்கள் வழிபடுவர் என்று ஆசிர்வதித்தார்.

அந்தவகையில் ராஜஸ்தானில் காது ஷியாம் (Khatu shyam Temple) கோவிலில் பார்பரிகனை கடவுளாக வழிபடுகிறார்கள் மக்கள். இந்தக் கோவிலில் கிருஷ்ணனாக பார்பரிகனை வழிபடுகிறார்கள். ஆகையால்தான் ஷியாம் என்ற பெயர் வந்தது. மேலும் தலை மட்டும் பார்பரிகன் தலை இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்? மறந்தும் இதை செய்யாதீர்கள்!
Temple

இந்த கோவில் கட்டப்பட்ட கதையை கேட்டால் அதிர்ச்சி அடைந்துப் போவீர்கள், கலியுகம் பிறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு, ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள காது என்ற பகுதி மறைந்தே இருந்து வந்தது. அந்த பகுதியில் பசுவின் மடியிலிருந்து தானாகவே பால் வந்துக்கொண்டிருந்தது, இதனை கவனித்த மக்கள், இந்த நிலத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்து தோண்டிப் பார்த்தால், ஒரு தலை இருந்திருக்கிறது. அதனை பல நாட்கள் ஒரு பிராமணர் வழிபட்டு வந்தார். அந்த தலையை என்ன செய்ய வேண்டும் என்று அறியாத அந்த மக்கள், அந்த பிராமணரிடமே கொடுத்துவிட்டனர்.

அதேசமயத்தில், அப்பகுதியில் மன்னராக இருந்துவந்த ரூப்சிங் சௌஹான் கனவில் ஒரு தலையை கோவில் கட்டி நிறுவுவது போல வந்தது. அதேபோல் கோவில் கட்டப்பட்டு, தலை வைக்கப்பட்டது. பின்னர் சிலைகள் மட்டும் அங்கு வைத்து பூஜிக்கப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது இருக்கும் கோவில் போல், மறுகட்டுமானம் செய்யப்பட்டதாக இதன் வரலாறு கூறுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com