தமிழகத்தில் சித்திரகுப்தருக்கு அமைந்துள்ள கோயில் எங்குள்ளது தெரியுமா?

Do you know where is the temple of Chitragupta in Tamil Nadu?
Do you know where is the temple of Chitragupta in Tamil Nadu?

ந்தியாவில் சித்திரகுப்தருக்காக பிரத்யேகமாக அமைந்துள்ள கோயில்கள் இரண்டு இடங்களில் உள்ளன. ஒன்று மத்தியபிரதேசத்தில் உள்ள கஜூரஹோ கோயில், இன்னொன்று தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் சித்திரகுப்தருக்காக விசேஷமாக அமைந்துள்ள கோயில் உள்ளது. இது 9ம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. கோயிலின் ஒருபுறம் இராமலிங்கனார் சன்னிதியும், மறுப்புறம் விநாயகர் சன்னிதியும் உள்ளன. இக்கோயில் கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் சித்திரா பௌர்ணமி அன்று நடைபெறும் திருவிழா மிகவும் விசேஷமாகும்.

ஒரு சமயம் தேவேந்திரன் தான் செய்த தவறுக்காக கௌதம முனிவரிடம் சாபம் பெற்று, அந்த சாபம் நீங்க காஞ்சிபுரத்தில் இருக்கும் சிவனை நோக்கி தவம் புரிந்தார். சிவனோ, கௌதம முனிவரின் சாபத்தால் உனக்கு தற்போதைக்கு புத்திர பாக்கியம் இல்லை. காமதேனுவின் வயிற்றில் உன் மகன் பிறப்பான் என்று ஆசிர்வதித்தார். இதனாலேயே சித்திரகுப்தருக்கு பசும்பால், நெய், தயிர் கொண்டு அபிஷேகம் செய்ய மாட்டார்கள்.

ஒரு சமயம் சிவனும், பார்வதியும் பூமியில் உள்ள மனிதர்களின் பாவக் கணக்குகளை கணக்கெடுக்கவும், எம தர்மனுக்கு உதவியாகவும் ஒருவர் வேண்டும் என்று நினைத்தனர். சிவபெருமான் தங்கத் தட்டில் சித்திரம் ஒன்றை வரைய ஆரம்பித்தார். பின்பு பார்வதியை அந்த சித்திரத்தில் இருப்பவரை அழைக்கச் சொல்ல, பார்வதியும் ‘எழுந்து வா மகனே’ என்று அழைக்க, அந்தச் சித்திரமும் உயிர் பெற்றது. அதுவே சித்திரகுப்தராகும். ‘சித்திரா’ என்றால் சித்திரம், ‘குப்தா’ என்றால் ரகசியம் என்று பொருள். இவரே எமதர்மனுடன் சேர்ந்து மனிதர்களின் பாவக்கணக்குகளை எழுதி பராமரிப்பவராவார்.

இதையும் படியுங்கள்:
உடல் சூட்டை தணிக்கும் மகத்துவம் மிக்க 6 கீரைகள்!
Do you know where is the temple of Chitragupta in Tamil Nadu?

இக்கோயிலில் மூன்று அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரம் உள்ளது.கோயிலின் உள்ளே சித்திரகுப்தர் அமர்ந்திருப்பது போல சிலையிருக்கிறது. சித்திரகுப்தர் வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் பனையோலையும் உள்ளது. இக்கோயிலில் சித்திரகுப்தர் மற்றும் அவரது துனைவி கர்ணிக்காம்பாளும் உள்ளனர்.

இந்து புராணத்தின்படி சித்திரகுப்தர் எமனுடைய கணக்காளர் ஆவார். இவரே பூமியில் உள்ள மனிதர்களின் நல்லது கெட்டதற்கான கணக்குகளை பார்த்துக்கொள்பவர். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் மாதத்தில் அனுசரிக்கப்படும் சித்திரா பௌர்ணமி இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேதுவின் அதிதேவதையாக சித்திரகுப்தர் கருதப்படுவதால், இவரை தரிசித்தால் கேதுவினால் ஏற்படும் தடைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. பெண்கள் சித்திரகுப்தரின் அருளை பெறுவதற்காக விரதம் இருக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமத்தில் உள்ள கணக்காளர்கள், சித்திரகுப்தரை வேண்டிக்கொண்டே தங்கள் வேலைகளை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com