நவரத்தினங்களின் ராணி எது தெரியுமா?

Do you know which is the Queen of Navaratnas?
Do you know which is the Queen of Navaratnas?https://www.amudam.com

பெண்கள் முதல் ஆண்கள் வரை தற்போது பளபளக்கும் நவரத்தினங்கள் அணிவதில் விருப்பம் காட்டுகின்றனர். அழகுக்காக மட்டுமின்றி, வளம் பெருக்கும் ஆசைக்காக அவரவர் ராசிப்படி நவரத்தினங்கள் பதித்து மோதிரம் அணிவது தற்போது அதிகரித்து வருகிறது.

வைரம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் மற்றும் நீலம் ஆகியவையே நவரத்தினங்கள் என அழைக்கப்படுகின்றன. நவம் என்பது ஒன்பது என்ற பொருள் தரும். இதில் பளிச்சிடும் வைரமே நவரத்தினங்களின் ராணி எனப்படுகிறது. நம் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்கது கோஹினூர் வைரம். இதைப் பற்றி ஏராளமான சுவாரஸ்யமான கதைகள் உண்டு.

வைர நெஞ்சம், வைரம் பாய்ந்த தேகம் என்றெல்லாம் சொல்வதுண்டு. உறுதி என்பதன் உருவகமாக வைரம் உள்ளது. அந்த அளவுக்கு மிகவும் உறுதியானது வைரம். வைரத்தையும் கண்ணாடியையும் அறுக்க வைரம்தான் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரம் வடமொழியில் வச்ரம் (வஜ்ரம்) என்று அழைக்கப்படுகிறது.வஜ்ரம் என்றால் உறுதியானது. வளைக்கவோ உடைக்கவோ முடியாத ஒன்று என்று பொருள்.

வைரத்தின் ஒவ்வொரு துகளும் எண்கோணப் பட்டை வடிவில்தான் இருக்கும். வெள்ளை ஒளியை சிதறச் செய்து நிறமாலையை உருவாக்கும். சிறந்த மின் காப்பு ஆற்றல் உடையது. எரிந்து கரைந்து புதைந்து போன மரங்களின் கரியிலிருந்து எடுக்கப்படுவதால் வைரம் கரிமம் (nonmetal) எனவும் அறியப்படுகிறது.

வைரம் நம் நாட்டின் தென்பகுதியில் மட்டுமே கிடைக்கின்றது. இங்கு பெண்ணாறு, கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஆறுகளின் படுகைகளில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வைரங்கள் கிடைத்ததாக தகவல்கள் உண்டு.  நல்ல வெண்மையான வைரம் ஆற்று ஓரங்களிலும், நீல நிற வைரம் சுரங்கங்களிலும்  உருவாகும். உலகில் கிடைக்கக்கூடிய வைரங்களில் 90 சதவிகிதம் ஆப்பிரிக்க சுரங்கங்களில் கிடைக்கின்றன.

பொருளாதார ரீதியாக அனைவராலும் வைரத்தை வாங்கி அணிய முடியாது. அதேபோல், சில ராசியைச் சேர்ந்தவர்களை வைரம் அணியத் தவிர்க்க சொல்கிறது ஜோதிடம். வைரத்திற்குரிய கிரகம் சுக்ரன் என்பதால், சுக்ரன் ஆட்சியாக இருக்கும் ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள், ரிஷபம், துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சுக்ரன் உச்சமாக இருப்பவர்கள் அணியலாம் என்பது போன்ற விதிகள் உள்ளன. சுக்ரனுக்குப் பகைவராக விளங்கும் குரு ராசியான தனுசு, மீனம் ராசிக்காரர்களும் லக்கினக்காரர்களும் வைரம் அணியக்கூடாது என்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள்.

இதையும் படியுங்கள்:
தடைகளை நீக்கி ஐஸ்வர்யம் பெருக்கும் குத்து விளக்கு பூஜை!
Do you know which is the Queen of Navaratnas?

சுகபோகம் நல்கும் சுக்ரனுடன் தொடர்புடைய வைரத்தை அணிவதால் செரோட்டோனின் டோப்போமின் என்ற மன மகிழ்ச்சி தரும் உதவும் சுரப்பிகள் அதிகம் சுரந்து அதை அணிபவர்களுக்கு ஆக்கபூர்வமான எண்ணங்களும் உற்சாகமும் உண்டாகும். இதனால் செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும்.

வைரத்தை நல்ல வைர வியாபாரியிடம் மட்டுமே நேரில் போய் பார்த்து வாங்க வேண்டும். அவர்கள் மூன்று சி யுடன் என்று (carot, cut, clarity) வைரத்தை விற்பார்கள். அவ்வாறு வாங்கும் வைரத்தை நல்ல முறையில் குலதெய்வத்தின் முன்வைத்தும் மகாலட்சுமி தாயாரின் முன்வைத்தும் பூஜை செய்து வளர்பிறை வெள்ளிக்கிழமையில் சுக்ர ஓரையில் அணிய வேண்டும் என்கிறார்கள் அதைப் பற்றி அறிந்தவர்கள்.

வைரம் அணிந்தாலும் வைரம் போல் உறுதியான எண்ணத்துடன் எதற்கும் கலங்காத மனதுடன் இருந்தாலே சுகங்களும் சேரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com