‘ஸ்ரீராம ஜெயம்’ முதலில் எழுதியது யார் தெரியுமா?

Do you know who first wrote 'Sri Rama Jayam'?
Do you know who first wrote 'Sri Rama Jayam'?https://www.flickr.com

‘ராம’ என்ற மந்திரத்திற்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி, ‘மரா’ என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும் ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று அர்த்தம். ராம மந்திரம் எழுதுவோர்க்கும் சொல்வோர்க்கும் எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.ரா’ என்றால் இல்லை; ‘மன்’ என்றால் தலைவன். ‘இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை’ என்பதே இதன் பொருள்.

ஸ்ரீராம ஜெயம் என்பதை முதலில் எழுதியது யார் தெரியுமா? போரில் இராவணனை வீழ்த்திய ஸ்ரீராமர், இந்தச் செய்தியை ஜானகியிடம் சொல்வதற்கு ஆஞ்சனேயர்தான் சரியானவர் என்று அனுமனிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறார். ராமபிரானின் ஆணையை சிரமேற்கொண்டு சீதையின் இருப்பிடத்திற்கு வந்த ஆஞ்சனேயர் சந்தோஷ மிகுதியால் பேச முடியாமல் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, நிற்கிறார். இதைக் கண்ட சீதைக்கு அனுமன் ஏன் கண் கலங்குகிறார் என்ற கவலை. இதை சட்டென்று புரிந்துகொண்ட அனுமன், ஸ்ரீராமர் வெற்றி பெற்ற நற்செய்தியை சீதையின் முன்பு மணலில், ‘ஸ்ரீராம ஜெயம்’ என்று எழுத, அதைப் படித்த சீதா தேவியும் சந்தோஷம் அடைந்தாராம்.

ஸ்ரீராம ஜெயம் என்பதை 108 முறை எழுதுவது சிறந்தது. இதனைத் தொடர்ந்து எழுதுபவர்களுக்கு அனுமன் அருள் கிடைப்பதுடன் எண்ணிய எல்லாம் கிடைக்கும். இதை நமது தினப்படி வேலைகளில் ஒன்றாகக் கருதி, காலையில் ஒரு முறை, இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு ஒரு முறை என நோட்டுப் புத்தகத்தில் 108 முறை எழுதுவது அதிக அளவில் பலனைத் தரும். இதற்கு பூரண நம்பிக்கையும் பக்தியும்தான் தேவை.

இதையும் படியுங்கள்:
கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டுவது எப்படி தெரியுமா?
Do you know who first wrote 'Sri Rama Jayam'?

ஸ்ரீராம ஜெயம் எழுதுவதால், வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் மட்டுமின்றி, நம் உள்ளே இருக்கும் கெட்ட குணங்களையும் வெல்லும் சக்தியை தரும். ஸ்ரீராம மந்திரத்தை எழுதுபவர்களுக்கும் உச்சரிப்பவர்களுக்கும் எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும். ஸ்ரீராம அம்பு எப்படி இலக்கை நோக்கி பாயுமோ, அதுபோல் ஸ்ரீராம நாமமும் நம் எண்ணத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டது.

ஸ்ரீராம ஜெயம் எழுதும்போது வேறு எந்த சிந்தனையும் இன்றி நம் மனம் ஒன்றி எழுதுவது நல்ல பலன்களைத் தரும். தனியாக யாரும் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்து அமைதியாக மனதிற்குள் அனுமனையும் ராமபிரானையும் மனதில் நினைத்துக் கொண்டே தனித்தனியாக பேப்பரில் 108 முறை எழுதி அதனை சுருட்டி ஒவ்வொரு பேப்பர் துண்டுக்கும் மஞ்சள் அல்லது செந்தூரம் தடவி மாலை போல் கட்டி அருகிலுள்ள அனுமன் ஆலயத்தில் அனுமனுக்கு சாத்தி வழிபட, எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதுடன் நம் வேண்டுதல்களும் தடையில்லாமல் நிறைவேறி வாழ்வில் எதிலும் வெற்றி பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com