நடராஜப் பெருமானின் காலடியில் இருக்கும் முயலகன் யார் தெரியுமா?

Who is the Muyalagan under Nataraja's foot?
Sri Natarajar, Gajasamharamoorthy
Published on

டராஜப் பெருமான் தனது வலது காலில் ஒரு அரக்கனை மிதித்தபடி காட்சி தருவார். அந்த அரக்கனின் பெயர் முயலகன். முயலகன் எப்படி தோன்றினான். அவனை ஏன் நடராஜப்பெருமான் தனது காலடியில் மிதித்தபடி காட்சி தருகிறார்? அது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடராஜப் பெருமானின் வலது காலின் கீழ் முயலகனைக் காணலாம். முயலகன் வளைந்தும் நெளிந்தும் படுத்திருப்பதைக் காணலாம். இதனால் முயலகனை அபஸ்மாரன் என்று அழைப்பது வழக்கம். அபஸ்மாரம் என்றால் வளைந்து நெளிதல் என்று பொருள்.

ஒரு சமயம் திருப்பராய்த்துறையில் தாருகாவனத்தில் நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகள் வேள்விகள் பல செய்து பல சக்திகளைப் பெற்று தங்கள் பத்தினியரோடு வாழ்ந்து வந்தனர். தாங்கள் பிறரை விட அதிக சக்தி மிக்கவர்கள் என்ற எண்ணத்தின் காரணமாக இவர்களுக்கு ஆவணம் மிகுந்திருந்தது. இதை உணர்ந்த ஈசன் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்கி ஆட்கொள்ள திருவுளம் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
மார்கழி ஆருத்ரா தரிசனம்: துன்பம் போக்கும் திருவாதிரை திருநாள்!
Who is the Muyalagan under Nataraja's foot?

ஈசன் பிட்சாடனர் வேடம் தாங்கி ரிஷிகளின் இடத்திற்கு வந்தார். மகாவிஷ்ணு மோகினி வடிவம் தாங்கி அவருடன் சென்றார். ரிஷிகளும் அவர்களுடைய பத்தினிகளும் இருவரையும் கண்டனர். ரிஷிகள் மோகினியை தொடர, அவர்தம் பத்தினிகள் பிட்சாடனரை தொடர்ந்தார்கள். சற்று நேரத்தில் ரிஷிகள் இருவரின் உண்மை உருவங்களைக் காண்கிறார்கள்.

பிட்சாடனரை அழிக்க ரிஷிகள் அபிசார வேள்வியைத் தொடங்கினர். இந்த வேள்வி எதிரிகளை அழிப்பதற்கும் நினைத்த காரியத்தை நிறைவேற்றவும் செய்யப்படும் ஒரு வேள்வியாகும். வேள்வியிலிருந்து தோன்றிய புலியை அவர்கள் சிவபெருமான் மீது ஏவ, அவர் புலியைக் கொன்று அதன் தோலை தனது ஆடையாக உடுத்திக் கொண்டார். தொடர்ந்து மானையும் பாம்புகளையும் ஏவினர். சிவபெருமான் மானை அடக்கி அதைத் தனது இடது கரத்தில் ஏந்திக் கொண்டார். பாம்பை தனது அணிகலனாக அணிந்து கொண்டார். மேலும், ரிஷிகள் பூதகணங்களை ஏவ அவற்றை அடக்கி தனது படையில் சேர்த்துக் கொண்டார். ரிஷிகள் ஒரு பிரம்மாண்டமான யானையினை ஏவ, சிவபெருமான் அதன் தோலை உரித்து தன் மீது போர்த்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சி தந்தார்.

இதையும் படியுங்கள்:
அருணாசலத்துடன் ஐக்கியமான அருணை ஜோதி!
Who is the Muyalagan under Nataraja's foot?

தங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவ, அதனால் சினம் கொண்ட ரிஷிகள் மந்திரத்தை ஜபிக்க வேள்வியிலிருந்து முயலகன் என்ற அரக்கன் தோன்றினான். ரிஷிகள் ஈசனைக் கொல்ல முயலகனை ஏவுகின்றனர். முயலகன் ஈசனுடன் போர் செய்தான். ஒரு கட்டத்தில் ஈசன் முயலகனை தனது காலில் மிதித்து அவனை அடக்கி ஆனந்தத் தாண்டவம் ஆடினார். இதன் பின்னரே ரிஷிகளின் ஆணவம் அடங்கியது. அவர்கள் ஈசனே இறைவன் என்றும் அவரது ஆற்றலே பெரியது என்பதையும் புரிந்து கொண்டனர். இதன் பின்னர் ஈசன் அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராகக் காட்சி தந்து ரிஷிகளை தடுத்தாட்கொண்டார்.

ஆணவம் தோல்வியைத் தரும் என்பதும் ஆணவம் உடையவர்களால் இறைவனை அடைய முடியாது என்பதை உணர்த்துவதற்காக நடத்தப்பட்ட ஒரு திருவிளையாடலே இந்த நிகழ்வாகும்.

இதையும் படியுங்கள்:
திருவாதிரை களி: வெறும் பிரசாதம் மட்டுமல்ல; 'ஆனந்தத்தின்' அடையாளம்!
Who is the Muyalagan under Nataraja's foot?

கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளைப் பற்றியிருந்த ‘முயலகன்’ என்னும் ஒரு வகையான இழுப்பு நோயை நீக்கிய தலம் திருப்பாச்சிலாச்சிரமம் திருத்தலமாகும். இந்த நோயினை முசல்வலிப்பு என்றும் கூறுவர். கொல்லிமழவனுக்கு நீண்ட நாட்கள் மக்கட்பேறு வாய்க்காமல் இருந்து ஈசனின் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முயலகன் என்ற இழுப்பு நோய் இருப்பதை அறிந்த கொல்லிமழவன் உடைந்து போனார். கோயிலுக்கு அந்தக் குழந்தையைக் கொண்டு வந்து ஈசனிடம் தனது குழந்தையின் முயலகன் நோயை நீக்கியருளுமாறு வேண்டிக் கொண்டார்.

அப்போது அங்கே வந்திருந்த திருஞானசம்பந்தர் குழந்தையின் நிலை கண்டு இரங்கி ஈசனைத் துதித்து ஒரு பதிகம் பாடியருளினார். அக்கணமே குழந்தையின் முயலகன் இழுப்பு நோய் நீங்கியது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் ‘எனையடைந்த குட்டம் வினைமிகுந்த’ என்று தொடங்கும் பதிகத்திலும் ‘இருமலு ரோக முயலகன் பாதமெரி குணநாசி’ எனும் பதிகத்திலும் முயலகன் நோயைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com